Home
News

44எம்பி செல்பி கேமரா கொண்ட Vivo Y75 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அடுத்த வருடம் தொடக்கத்தில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பிரபலமான விவோ Y75 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்து அசத்தியுள்ளது விவோ நிறுவனம்.

அதாவது ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ Y75 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.1000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். இப்போது விவோ Y75 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

44எம்பி செல்பி கேமரா கொண்ட Vivo Y75 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

விவோ Y75 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் 1080x2400 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு இந்த விவோ Y75 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்தது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த விவோ போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் செயல்திறன் அருமையாக இருக்கும், அதேபோல் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் ஸ்மார்ட்போனை வேகமாக இயக்க உதவுகிறது இந்த மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட்.

விவோ Y75 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ Y75 ஸ்மார்ட்போன்.

விவோ Y75 ஸ்மார்ட்போன் 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 5000 எம்ஏஏச் பேட்டரி கொடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இருந்தபோதிலும் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ சாதனம். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ Y75 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 172 கிராம். ஒரு அருமையான கேமரா ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
Vivo Y75 smartphone with 44MP selfie camera gets Rs 1000 price cut: Check Price, Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X