ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வரும் விவோ ஒய்75 5ஜி- ஜனவரியில் இந்தியாவில்., இந்தமுறை அந்த நடிகர்தான்?

|

விவோ சமீபத்தில் விவோ ஒய்21இ மற்றும் விவோ ஒய்33டி சாதனத்தை அதன் ஒய் சீரிஸ் கீழ் நாட்டில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த பிராண்ட் இந்தியாவில் விவோ ஒய்75 என அழைக்கப்படும் மற்றொரு சாதனத்தை ஒய் தொடரின் கீழ் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஸ்மார்டபோன் முன்னதாகவே பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய வெளியீட்டு காலவரிசை மற்றும் வரவிருக்கும் விவோ ஒய்75 சாதனத்தின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. விவோ ஒய் 75 5ஜி சாதனத்தின் சில முக்கிய அம்சங்களும் வெளியாகி இருக்கின்றன.

விவோ ஒய்75 5ஜி

விவோ ஒய்75 5ஜி

விவோ ஒய்75 5ஜி ஜனவரி இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக வெளியான தகவல் குறித்து பார்க்கையில் இந்த விவோ ஸ்மார்ட்போன் ஜனவரி26 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கிறது. இருப்பினும் தற்போது வரை விவோ இதுதொடர்பான எந்த அறிக்கையும் தகவலையும் வெளியிடவில்லை. இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விவோ ஒய்75 5ஜி அம்சங்கள்

விவோ ஒய்75 5ஜி அம்சங்கள்

91 மொபைல்ஸ் அறிக்கையின்படி வரவிருக்கும் விவோ ஒய்75 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்டைலான மற்றும் ப்ரீமியம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கிறது. இந்த சாதனம் மெய்நிகர் ரேம் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மெமரி ஃப்யூஷன் 2.0 மூலமாக இதன் 4ஜி விர்ச்சுவல் ரேம் வருப்பத்தை 8 ஜிபி ரேம் வரை விரிவாக்கம் செய்யலாம். வரவிருக்கும் விவோ ஒய்75 5ஜி சாதனத்துக்கு நடிகர் சாரா அலிகான் பிராண்ட் தூதராக இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் ஆதரவு

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் ஆதரவு

முந்தைய தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் எனவும் இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஒஎஸ் 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் மூலம் இயங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் காட்சி, முன்புற கேமரா மற்றும் சேமிப்பக விருப்பங்கள் போன்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. வெளியான தகவலின்படி இந்த சாதனம் ரூ.15,000 என்ற விலைப்பிரிவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விவோ Y21A ஸ்மார்ட்போன்

புதிய விவோ Y21A ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் சமீபத்தில் புதிய விவோ Y21A ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ Y21A ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600X720பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி

விவோ Y21A ஸ்மார்ட்போனில் மிகவம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்தஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் IMG PowerVR GE8320 GPU ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

13 எம்பி பிரைமரி சென்சார்

13 எம்பி பிரைமரி சென்சார்

விவோ Y21A ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் ஃபேஸ் பியூட்டி, ஃபில்டர்கள் மற்றும் பொக்கே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடிபிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y75 5G Smartphone Might Launching Soon in India With Android 12 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X