விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!

|

விவோ ஒய்75 4ஜி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் ஸ்மார்ட்போனின் டீஸரை பகிர்ந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீபத்திய ஒய் தொடர் அறிமுக விளம்பரத்துக்கு பாலிவுட் நடிகை சாரா அலி கானுடன் நிறுவனம் இணைந்திருக்கிறது. அதேபோல் விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் இணையதளத்தில் கசிந்திருக்கின்றன.

விவோ ஒய்75 4ஜி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்75 4ஜி சிறப்பம்சங்கள்

விவோ தற்போது விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், நிறுவனம் ஸ்மார்ட்போனை மூன்லைட் ஷேடோ மற்றும் டான்சிங் வேவ்ஸ் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான வண்ண வகைகளில் வெளியிடப்படும் என்பதை பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் டிப்ஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளது.

மெலிதான வடிவமைப்புடன் விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போன்

மெலிதான வடிவமைப்புடன் விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போன்

வெளியான தகவலின்படி, விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனானது மெலிதான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் இதன் எடை 172 கிராம் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பெரிய சதுர கேமரா தொகுதி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் மூன்று கேமராக்கள் மற்றும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் உடனான அம்சத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது.

6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் உடன் 6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஜி96 கேமிங் சென்ட்ரிக் சிப் செட் மூலம் இது இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு இக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த சாதனம் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

விவோ ஒய்75 4ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி கேமராவுடன் 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி சூப்பர் மேக்ரோ ஸ்னாப்பர் லென்ஸ் கேமராவுடன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் நைட் செல்பி பயன்முறை மற்றும் ஏஐ எக்ஸ்ட்ரீம் நைட் பயன்முறையுடன் கூடிய 44 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. 4ஜி அம்சம், 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு கூடிய 4050 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. விவோ ஒய்75 4ஜி மே22 முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் ரூ.20,000 விலைப்பிரிவில் வரும் என கூறப்படுகிறது.

விவோ எக்ஸ் 80 தொடர் இந்தியாவில் அறிமுகம்

விவோ எக்ஸ் 80 தொடர் இந்தியாவில் அறிமுகம்

விவோ எக்ஸ் 80 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விவோ எக்ஸ் 80 ப்ரோ சாதனத்தின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.79,999 எனவும் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.54,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விவோ எக்ஸ் 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் வண்ணத்தில் கிடைக்கும் அதேபோல் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் மற்றும் அர்பன் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கும். விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிஎன்வி முதன்மை கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட் சோனி ஐஎம்எக்ஸ் 598 ஷூட்டர், 12 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 663 சென்சார்கள் மற்றும் 8 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் என குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y75 4G Smartphone Launching Soon in India with 44Mp Selfie Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X