Home
News

யாரு விடுவா? 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. விவோ 5ஜி போனுக்கு விலை குறைப்பு.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தொடர்ந்து தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்து வருகிறது. சமீபத்தில் விவோ டி2 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது விவோ ஒய்56 5ஜி ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்து அதிரடி காட்டியுள்ளது விவோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்56 5ஜி போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த 4ஜிபி ரேம் கொண்ட விவோ ஒய்56 5ஜி மாடலை ரூ.15,999 விலையில் வாங்க முடியும். பின்பு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்56 5ஜி போனின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் 8ஜிபி ரேம் கொண்ட விவோ ஒய்56 5ஜி மாடலை ரூ.17,999-விலையில் வாங்க முடியும்.

யாரு விடுவா?  50MP கேமரா.. விவோ 5ஜி போனுக்கு விலை குறைப்பு..

இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2408 × 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் Dimensity 700 சிப்செட். பின்பு FunTouch OS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ Y565ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

யாரு விடுவா?  50MP கேமரா.. விவோ 5ஜி போனுக்கு விலை குறைப்பு..

குறிப்பாக விவோY56 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் இந்த விவோ போன் குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது.

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y56 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு கருப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய விவோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த விவோ போனை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y56 5G smartphone price cut in India: check new price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X