புதிதாக விவோ Y55s 5G பட்ஜெட் விலையில் அறிமுகம்.. என்ன சிறப்பம்சம் தெரியுமா?

|

Vivo நிறுவனம் புதிதாக விவோ Y55s 5G என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்த புதன்கிழமை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இது விவோ நிறுவனத்தின் ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவில் புதிய 5G பொருத்தப்பட்ட சேர்த்தலைக் குறிக்கிறது. முந்தைய கசிவுகளால் கணிக்கப்பட்ட படி, புதிய Vivo Y55s ஆனது MediaTek Dimensity 700 சிப்செட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய விபரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

புதிதாக விவோ Y55s 5G பட்ஜெட் விலையில் அறிமுகம்.. என்ன சிறப்பம்சம் ?

புதிய Vivo Y55s 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது 6000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய Vivo Y55s ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. புதிய VivoY55s ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த புதிய Vivo Y55s 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் நிறுவனத்தின் ஆரிஜின் ஓஎஸ் ஸ்கின் உடன் கொண்டு இயங்குகிறது.

Vivo Y55s 5G விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Vivo Y55s 5G ஸ்மார்ட்போனின் அறிமுக விலை CNY 1,699 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 20,200 என்ற விலையை நெருங்குகிறது. இந்த Vivo Y55s ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பிங்க் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனுக்கான பட்டியல் இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் நேரலையில் உள்ளது. ஆனால் அது எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்திய அறிமுகம் பற்றிய தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

புதிதாக விவோ Y55s 5G பட்ஜெட் விலையில் அறிமுகம்.. என்ன சிறப்பம்சம் ?

புதிய Vivo Y55s 5G ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்
புதிய Vivo Y55s ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி பார்க்கையில், இந்த சாதனம் MediaTek Dimensity 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய Vivo Y55s 5G ஆனது 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய Vivo Y55s 5 ஜி ஸ்மார்ட்போன் 8 GB RAM மற்றும் 128 GB சேமிப்பகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் கொண்ட முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனம் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இதை யூஎஸ்பி டைப் சி மூலம் 18வாட் சார்ஜ் செய்யலாம்.

பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது என்பதை விவோ உணர்ந்துள்ளது. இந்த புதிய Vivo Y55s ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பார்க்கையில் இது பின் பக்கத்தில், Vivo Y55s 5G இரட்டை கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இதில் f/1.8 துளையுடன் கூடிய 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் f/2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வாட்டர் டிராப் ஸ்டைல் ​​நாட்ச்சில் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீழே உள்ள USB Type-C போர்ட்டிற்கு அடுத்ததாக 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y55s 5G With MediaTek Dimensity 700 SoC Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X