Home
News

44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!

விவோ ஒய்75 ஸ்மார்ட்போனானது 44 எம்பி செல்பி கேமரா, 44 வாட்ஸ் ஃப்ளாஷ்சார்ஜ் உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவோ ஒய்75 ஸ்மார்ட்போனானது இந்திய மதிப்பில் ரூ.20,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனமானது ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனத்தின் பிற சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய விவோ சாதனமானது மெலிதான வடிவமைப்பு

புதிய விவோ சாதனமானது மெலிதான வடிவமைப்பு

சீன ஸ்மார்ட்போன் பிராண்டின் சமீபத்திய ஒய் சீரிஸ் சாதனமாக ஒய்75 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ சாதனமானது மெலிதான வடிவமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் இரண்டு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. விவோ ஒய்75 ஸ்மார்ட்போனானது மீடியா ஹீலியோ ஜி96 எஸ்ஓசி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 44 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்பி கேமரா உடன் வருகிறது. அதேபோல் இந்த விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது நீடிக்கப்பட்ட பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது.

விவோ ஒய்75 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ ஒய்75 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ ஒய்75 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.20,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் டான்சிங் வேவ்ஸ் மற்றும் மூன்லைட் ஷேடோ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. தற்போது இந்த சாதனம் பிளிப்கார்ட், விவோ இஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஒன்கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1500 வரை தள்ளுபடி இருக்கிறது.

விவோ ஒய்75 சிறப்பம்சங்கள்

விவோ ஒய்75 சிறப்பம்சங்கள்

விவோ ஒய்75 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் டூயல் சிம் நானோ ஆதரவு, ஆண்ட்ராய்டு 11ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 12 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. ஹூட்டின் கீழ் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி96 4ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

பின்புற கேமரா அம்சங்கள்

பின்புற கேமரா அம்சங்கள்

மேலும் பின்புற கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அகல கோண சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆதரவோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இந்த விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் 44 எம்பி ஆட்டோஃபோகஸ் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.

44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் கேமரா யூனிட், அல்ட்ரா வைட் நைட், சூப்பர் மேக்ரோ, போர்ட்ரெய்ட் மோட், லைவ் ஃபோட்டோ மற்றும் பொக்கே மோட் ஆதரவுடன் வருகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது இதன்மூலமாக மெமரி சேமிப்பை விரிவாக்கம் செய்ய முடியும். விவோ ஒய்75 ஸ்மார்ட்போனானது 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி

விவோ ஒய்75 ஸ்மார்ட்போனில் வைஃபை, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என அங்கீகரிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது மூன்லைட் ஷேடோ வண்ண மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இதன் எடை 172 கிராம் ஆக இருக்கிறது. இந்த சாதனம் நீட்டிக்கப்பட்ட ரேம் அம்சத்தைக் கொண்டுள்ளது. உள்சேமிப்பிகத்தை பயன்படுத்தி நினைவகத்தை நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Vivo Y55 Smartphone Launched in India With 44MP Selfie Camera, Android 11 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X