Home
News

விவோ Y51A வாங்கினால் வாழ்நாளில் ஸ்டோரேஜ் சிக்கலே இல்லை.. கம்மி விலையில் இவ்வளவு அதிக ஸ்டோரேஜா?

விவோ நிறுவனம் புதிதாக விவோ ஒய் 51 ஏ (Vivo Y51A) ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வேரியண்ட் மாடலை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக விவோ இன்று அறிவித்துள்ளது. 5000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜ் கொண்ட விவோ Y51A ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் ஸ்டோரேஜ் வேரியண்ட் தற்போது குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 1 டிபி வரை விரிவாக்கக்கூடிய கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y51A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்

விவோ Y51A ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்

விவோ Y51A ஸ்மார்ட்போன் இப்போது இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. விவோ இந்தியா ஆன்லைன் கடையில் டைட்டானியம் சஃபையர் மற்றும் கிரிஸ்டல் சிம்பொனி ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது. இந்நிறுவனம் முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 8 ஜிபி வேரியண்ட்டை ரூ.17,990 விலைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய மாறுபாட்டின் அனைத்து விவரக்குறிப்புகளும் முந்தையதைப் போலவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y51A ஸ்மார்ட்போனுக்கான அறிமுக சலுகை

விவோ Y51A ஸ்மார்ட்போனுக்கான அறிமுக சலுகை

விவோ Y51A ஸ்மார்ட்போனுக்கான அறிமுக சலுகைகளில் எச்.டி.எஃப்.சி வங்கியிடமிருந்து ரூ .1,000 கேஷ்பேக் உங்களுக்கு இப்போது கிடைக்கிறது. Vi-யிலிருந்து கிடைக்கும் நன்மைகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ், ஹோம் கிரெடிட், ஐ.டி.எஃப்.சி முதல் வங்கி, எச்டிபி கிரெடிட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றிலிருந்து ஜீரோ டவுன் கட்டணம் செலுத்தும் திட்டங்கள் இதில் அடங்கும். சரி இப்போது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.

விவோ Y51A விவரக்குறிப்புகள்

விவோ Y51A விவரக்குறிப்புகள்

விவோ Y51A ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் உடன் கூடிய 1080 × 2408 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. விவோ ஒய் 51 ஏ ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டூச் ஓஎஸ் 11 மென்பொருளில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பாதுகாப்பிற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குகிறது.

1டிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்

1டிபி வரை கூடுதல் ஸ்டோரேஜ்

விவோ Y51A ஸ்மார்ட்போனானது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜ்ஜை 1டிபி வரை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. இது பயனர்களுக்கு ஸ்டோரேஜ் சிக்கல் இல்லாமல் இருக்க பெரிதும் உதவுகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.

விலை எவ்வளவு குறைவா?

விலை எவ்வளவு குறைவா?

கேமராவை பொறுத்தவரையில், இந்த சாதனம் பின்புறத்தில் டிரிபிள்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்களைக் கொண்டுள்ளது. அதேபோல், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதில் 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பரை விவோ வழங்கியுள்ளது. இணைப்பு முன்னணியில், இது புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டை ஆதரிக்கிறது. இது தற்போது ரூ. 16,990 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y51A 6GB Variant Launched In India With 1TB Of External Storage For Just Rs 16990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X