முழுசா செதுக்கி வச்சுருக்காங்க! விலை வேற கம்மி! டிசைன் கிங் Vivo Y36 போன்!
விவோ (Vivo) ஸ்மார்ட்போன் (Smartphone) தயாரிப்பு நிறுவனத்தின் புதிய விவோ ஒய் 36 (Vivo Y36) போன் அட்டகாசமான அம்சங்கள் உடன் அறிமுகமாகியிருக்கிறது. இந்த போனின் டிசைன் பார்த்தாலே, வாங்க தோன்றும் அளவிற்கு அசத்தலாக இருக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் விலை குறித்த விவரங்கள் இதோ.
பட்ஜெட் விலையில் பக்காவான டிசைனுக்காக காத்திருக்கும் விவோ போன் பிரியர்களுக்கு, விவோ ஒய் 36 போன் சூப்பரான சாய்ஸ் என்றே சொல்லலாம். மிகவும் லைட் வெயிட்டில் ஸ்லிம் டிசைனில் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் விவோ ஒய் 36 இந்தோனேசியாவில் வெளியாகியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாக உள்ளது.

விவோ ஒய் 36 போனின் அம்சங்கள்: இந்த போன் 6.64 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 650 நிட்ஸ் (nits) பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்டிராய்டு 13 (Android 13) உடன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி (Octa-Core Qualcomm Snapdragon 680 SoC ) சிப்செட் வருகிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. 1 டிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி பயன்படுத்திக் கொள்ளலாம். டூயல் நானோ (Nano) சிம் கார்டு ஸ்லாட் வருகிறது. இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு எல்இடி ஃபிளாஷ் (LED flash) வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. டைப்-சி போர்ட் உடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 15 நிமிடங்களுக்குள் 30 சதவீதம் சார்ஜாகிவிடும். சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வருகிறது. IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் (GPS) ப்ளூடூத் (Bluetooth) v5.1 மற்றும் என்ஃஎப்சி (NFC) உள்ளது. இதன் போனின் எடை 202 கிராம் மட்டுமே உள்ளது. இந்த போன் 4ஜி மற்றும் 5ஜி என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எஸ்ஓசி (MediaTek Dimensity 6020 SoC) சிப்செட் வருகிறது. இந்த விவோ ஒய் 36 போனின் விலையை பொறுத்தவரையில் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 4ஜி வேரியண்ட் ரூ.18,700ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5ஜி போனுக்கான விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








