இப்படி செஞ்சுட்டாங்களே Vivo.! அறிமுகத்திற்கு முன்னாடியே விலை மற்றும் சலுகை விபரம் லீக்.!
Vivo ஸ்மார்ட்போன் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, பெரும்பாலானோருக்கு சூப்பரான கேமரா அம்சம் தான் நினைவிற்கு வந்து செல்லும். ஏனென்றால், விவோ போன்கள் குறிப்பாக அவற்றின் சிறந்த கேமரா அனுபவம் மற்றும் சிறப்பம்சங்களுக்காகப் புகழ் பெற்றவை. எப்படிப் பார்த்தாலும், இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளும்படி தான் விவோ செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் சிறந்த கேமராவுடன் Vivo Y35 4G மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் புதிய Vivo Y35 4G
விவோ நிறுவனத்தின் லைன்அப் இல் கிடைக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக இருந்தாலும் சரி, அல்லது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலாக இருந்தாலும் சரி, அதில் பல கேமராக்கள் கொண்ட சிறப்பான கேமரா அமைப்பு கட்டாயம் இருக்கும். அப்படி தான், இந்த புதிய Vivo Y35 4G ஸ்மார்ட்போனில் விவோ நிறுவனம் இப்போது சிறப்பான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் இந்த வாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கவிருக்கிறது.

அறிமுகத்திற்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆன தகவல்
இந்த புதிய Vivo Y35 4G ஸ்மார்ட்போன் பற்றிய விலை விபரங்கள் மற்றும் சலுகை விபரங்கள் அறிமுகத்திற்கு முன்பாகவே இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புதிய Vivo Y35 4G ஸ்மார்ட்போன் மாடலை நாம் என்ன விலையில், என்ன சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம் வாங்க. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் இந்த வார இறுதிக்குள் விற்பனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன விவோ இப்படி செஞ்சுட்டாங்க? விலை கூட லீக்-ஆ!
மற்றொரு தகவலின் படி, இந்த புதிய விவோ Y35 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரத் துவக்கத்தில் விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, விற்பனைக்கு வரப்போகும் இந்த போனின் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, Vivo Y35 4G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வெறும் ரூ.18,499 விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

பாக்சில் வேற ரேட்! இதற்கான அர்த்தம் என்ன?
ஆனால், இந்த சாதனத்தின் பாக்சில் இருக்கும் விலை ரூ. 22,999 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அர்த்தம், இந்த போன் சலுகையுடன் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. Vivo Y35 4G ஸ்மார்ட்போன் அகேட் பிளாக் மற்றும் டான் கோல்ட் வண்ண விருப்பங்களில் விற்பனை வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்த வார இறுதியில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo Y35 4G மீது கிடைக்கும் சலுகை லீக் என்ன சொல்கிறது?
கூடுதலாக, டிப்ஸ்டர் பராஸ் குக்லானின் கூற்றுப்படி, இந்தியாவில் Vivo Y35 4G விற்பனையின் போது கேஷ்பேக் சலுகைகள் கிடைக்குமென்று சில விபரங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதன்படி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் கோடக் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகவல் குறித்து விவோ இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

Vivo Y35 4G சிறப்பம்ச விபரங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 1080 × 2408 பிக்சல் உடைய 6.58' இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே பேனலில் 90Hz ரெஃபிரஷ் ரேட் வீதம் மற்றும் NTSC வண்ண வரம்பின் 96 சதவீத கவரேஜ் உள்ளது. இது Qualcomm இன் 6nm Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB ஸ்டோரேஜ் வரை ஆதரிக்கிறது.

50MP கேமரா, 5000mAh பேட்டரி, பிளாஷ் சார்ஜ் எத்தனை வாட்ஸ்?
Vivo Y35 4G சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உடன் பின்புறத்தில் இரண்டு 2 மெகாபிக்சல் பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார்களை உள்ளடக்கியுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதில் 16MP சென்சார் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது. இது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த சாதனம் 44W பிளாஷ் சார்ஜ் ஆதரவை ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications