வாங்குனா இந்த போன் தான் வாங்கணும்! Vivo Y35 4G விற்பனைக்கு விரைவில் வருகிறது.!

|

இந்தியாவில், வாராவாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது குறைந்தது ஒன்று அல்ல இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதிலும், குறிப்பாகச் சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலை பிரிவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் Vivo நிறுவனமும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.

பட்ஜெட் விலையில் வருகிறதா Vivo Y35 4G ஸ்மார்ட்போன்?

பட்ஜெட் விலையில் வருகிறதா Vivo Y35 4G ஸ்மார்ட்போன்?

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் முக்கியமான விற்பனை தளமாக இந்தியா மாறியுள்ளதே இதற்கான ஒரு முக்கிய காரணம். தலைசிறந்த முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் விவோ நிறுவனத்திற்குச் சொந்தமான Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் களமிறங்கவிருக்கிறது.

Vivo Y35 4G போனின் விற்பனை குறித்த தகவல்

Vivo Y35 4G போனின் விற்பனை குறித்த தகவல்

இந்த புதிய Vivo Y35 4G ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பாகவே, இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த Vivo Y35 4G போனின் விலை என்ன? எங்கே வாங்கலாம்? இதன் சிறப்பம்சம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆஃப்லைன் சில்லறை கடைகளில் விரைவில் கிடைக்குமா?

ஆஃப்லைன் சில்லறை கடைகளில் விரைவில் கிடைக்குமா?

விவோ நிறுவனம் தனது Y சீரிஸின் கீழ் விவோ ஒய்35 4ஜி என்ற புதிய போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. நினைவுகூர, இந்த புதிய Vivo Y35 ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​மும்பையைச் சேர்ந்த ஒரு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் மூலம் இது விரைவில் விற்பனைக்குக் கிடைக்குமென்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo Y35 4G விரைவில் விற்பனைக்கு வருவது உறுதி

Vivo Y35 4G விரைவில் விற்பனைக்கு வருவது உறுதி

மகேஷ் டெலிகாம் என்பவர் மூலம் வெளியான தகவல் படி, Vivo Y35 4G ஸ்மார்ட்போன் விரைவில் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் இன்னும் Vivo Y35 ஐ நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், சில்லறை விற்பனையாளரின் ட்வீட் படி, Vivo Y35 4G விரைவில் விற்பனைக்கு வரும் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், விலை எதுவும் வெளியாகவில்லை. விரைவில் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த போன் எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் விலை என்ன?

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் விலை என்ன?

Vivo Y35 4G ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் IDR 33,99,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இது ஒரே ஒரு ஒற்றை வேரியண்ட் மாடலாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பின் படி, இது ரூ.18,500 விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இது கோல்டு மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

Vivo Y35 4G சிறப்பம்சம்

Vivo Y35 4G சிறப்பம்சம்

இந்த ஸ்மார்ட்போன் 1080 × 2408 பிக்சல் உடைய 6.58' இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே பேனலில் 90Hz ரெஃபிரஷ் ரேட் வீதம் மற்றும் NTSC வண்ண வரம்பின் 96 சதவீத கவரேஜ் உள்ளது. இது Qualcomm இன் 6nm Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB ஸ்டோரேஜ் வரை ஆதரிக்கிறது.

Vivo Y35 4G கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

Vivo Y35 4G கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

Vivo Y35 4G சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் உடன் பின்புறத்தில் இரண்டு 2 மெகாபிக்சல் பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார்களை உள்ளடக்கியுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதில் 16MP சென்சார் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது. இந்த சாதனம் 44W பிளாஷ் சார்ஜ் ஆதரவை ஆதரிக்கும். இது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y35 4G is expected to launch soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X