சரியான நேரம்- அமோக வரவேற்பு பெற்ற இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைக் குறைப்பு: டாப் அம்சம்!
விவோ ஒய்33எஸ் மற்றும் விவோ ஒய்33டி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றிருக்கின்றன. விலைக் குறைப்புக்கு பிறகான தற்போதைய விலை நிர்ணயம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது.

விவோ ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி
விவோ தற்போது அதன் இரண்டு ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. அது விவோ ஒய்33எஸ் மற்றும் விவோ ஒய்33டி ஸ்மார்ட்போன்கள் ஆகும். விவோ ஒய்33எஸ் மற்றும் விவோ ஒய்33டி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றிருக்கின்றன. விலைக் குறைப்புக்கு பிறகான தற்போதைய விலை நிர்ணயம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது.

விவோ ஒய்33டி, விவோ ஒய்33எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது ஒற்றை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.18,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனத்துக்கு ரூ.1000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டு ரூ.17,990 என கிடைக்கிறது. மறுபுறம் விவோ ஒய்33எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.18,990 என அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டு தற்போது இந்த சாதனம் ரூ.17,990 என கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு மும்மையை சேர்ந்த மகேஷ் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை நிர்ணயம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் பிரதிபலிக்கிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
விவோ ஒய்33டி 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே ஆதரவோடு 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியை கொண்டிருக்கிறது. இந்த போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 8 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு வருகிறது. இதன் மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது 128 ஜிபி உள்சேமிப்பு நீட்டிப்பு ஆதரவை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது. விவோ ஒய்33டி ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு கிடைக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி வசதி
விவோ ஒய்33எஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று பின்புற கேமரா வடிவமைப்பு, காட்சி முழுவதும் தடிமனான உளிச்சாயுமோரம் மற்றும் உச்சநிலை செல்பி கேமரா அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மிட்டே ட்ரீம் மற்றும் மிரர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 1,080x2,408 பிக்சல்கள் தீர்மானத்தோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ஹூட்டின் கீழ் விவோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்க ஸ்லாட் வசதி இருக்கிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் வசதி என டிரிபிள் கேமரா அம்சத்தோடு வருகிறது. ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதி உள்ளது. இதில் டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். சென்சார்களில் ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காமர்ஸ் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை அடங்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications