ரூ.15000 விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்- சமீபத்திய ஆண்ட்ராய்ட் 12, 5ஜி ஆதரவோடு விவோ ஒய்33இ 5ஜி!

|

விவோ நிறுவனம் விவோ ஒய்33இ ஸ்மார்ட்போனை மீடியாடெக் டைமன்சிட்டி செயலி, ஆண்ட்ராய்டு 12 ஆதரவுடன் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ ஒய்33இ 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்33இ 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ ஒய்33இ 5ஜி ஸ்மார்ட்போனானது சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற ஒரே வேரியண்ட்டில் கிடைக்கும். இந்த சாதனம் சுமார் ரூ.15,000 விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விவோ நிறுவனம் அறிமுகம் செய்த விவோ ஒய்33இ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி செயலி, ஆண்ட்ராய்டு 12 ஆதரவுடன் கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

விவோ ஒய்33இ 5ஜி ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் உள்நாட்டு சந்தையான சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான விவோ ஒய்33எஸ் 5ஜி சாதனத்தின் சற்றே மாறுபட்ட பதிப்பாகும். மலிவு விலைப் பிரிவில் வரும் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி, சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டிருக்கிறது. விவோ ஒய்33இ ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற ஒரே வேரியண்ட் உடன் வருகிறது. இதன் விலை RMB 1,299 அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.15,000 ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை சீனாவில் இந்த மாதமே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ ஒய்33எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் குறித்த தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

விவோ ஒய்33எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்33எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்

விவோ ஒய்33எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வாட்டர் டிராப் நாட்ச் வசதி மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த சாதனத்தில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. இந்த கைரேகை ஸ்கேனர் ஆனது பவர் பட்டனுடன் இணைந்து செயல்படுகிறது. விவோ ஒய்33எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக சேமிப்பு வசதியை விரிவாக்கம் செய்யலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

விவோ ஒய்33எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்துடன் 10 வாட்ஸ் சார்ஜிங் அடாப்டரும் வழங்கப்படுகிறது. இந்த சாதனமானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான Origin OS Ocean UI மூலம் இயங்குகிறது. விவோ ஒய்33எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த சாதனத்தில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் சாதனத்தின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் வசதியும் இருக்கிறது.

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன்

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் சமீபத்தில் புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனை மே 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த சாதனம் விரைவில் பிற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

50 எம்பி பிரைமரி கேமரா

50 எம்பி பிரைமரி கேமரா

விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடிபிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Y33e 5G Launched at Budget Price with 4GB RAM, Mediatek Dimesity Processor

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X