தரமான கேமராவுடன் கம்மி விலையில் Vivo Y22.! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

|

இந்த செப்டம்பர் மாதம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேட்ஜெட் பிரியர்களுக்கு பிடித்தமான மாதமாக மாறப்போகிறது. காரணம், இந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 முதல் துவங்கி, சியோமி, ரெட்மி, ஒப்போ, விவோ என்று பல முன்னணி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவர்களுடைய புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளனர். இந்த வரிசையில் அடுத்தபடியாக Vivo புதிதாக Vivo Y22 என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Vivo Y22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமா?

Vivo Y22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமா?

Vivo நிறுவனம் சமீபத்தில் Vivo Y22s ஸ்மார்ட்போனை வியட்நாமில் வெளியிட்டது. முந்தைய மாதத்தில் வெளிவந்த லீக் தகவலின் படி, விவோ நிறுவனம் நிலையான Vivo Y22 மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய Geekbench தரப்படுத்தல் தளத்திலும் சமீபத்தில் காணப்பட்டது. அதேபோல், மற்றொரு புதிய அறிக்கையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் முதல் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமான அம்சங்களுடன் விவோ திட்டமிடுவது Vivo Y22 போனிற்காக தானா?

தரமான அம்சங்களுடன் விவோ திட்டமிடுவது Vivo Y22 போனிற்காக தானா?

சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த புதிய Vivo Y22 ஸ்மார்ட்போனை இந்திய ரசிகர்கள் அடுத்த வாரத்தில் அறிமுகத்துடன் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் பராஸ் குக்லானி வெளியிட்ட தகவலில் Vivo Y22 பற்றிய சில சிறப்பம்ச விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, வரவிருக்கும் விவோவின் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் முழு HD+ கொண்ட 6.5' இன்ச் அளவுடைய டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கிறது. இது LCD பேனலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!ஸ்மார்ட்போனை அதிகமாக யூஸ் செய்தால் வேகமாக வயசாகிவிடுமா? உண்மையை உடைத்த ஆராய்ச்சி!

Geekbench விபரம் Vivo Y22 பற்றி என்ன பரிந்துரைக்கிறது?

Geekbench விபரம் Vivo Y22 பற்றி என்ன பரிந்துரைக்கிறது?

Geekbench பட்டியலின் குறிப்பு படி, Vivo Y22 ஆனது Helio G85 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் அம்சத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய Vivo Y22 ஸ்மார்ட்போன் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாகக் கூடுதல் ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் Android 12 OS இல் இயங்குகிறது என்பதையும் கீக்பெஞ்ச் தகவல் வெளிப்படுத்தியுள்ளது. இந்த Vivo Y22 ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

கம்மி விலையில் மிரட்டலான கேமராவுடன் வருகிறதா Vivo Y22?

கம்மி விலையில் மிரட்டலான கேமராவுடன் வருகிறதா Vivo Y22?

கேமரா அம்சத்தைப் பற்றிப் பேசுகையில் இந்த சாதனம் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்ட 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஸ்னாப்பர் பொருத்தப்பட்டிருக்கும் என்று கீக்பெஞ்ச் தகவல் குறிப்பிடுகிறது. இது 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

Vivo Y22 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Vivo Y22 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

சமீபத்திய லீக் தகவலில், இந்த Vivo Y22 சாதனம் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்குமா இல்லையா என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இந்த புதிய Vivo Y22 ஸ்மார்ட்போனை நாம் என்ன விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்பதற்கான சில லீக்கள் கிடைத்துள்ளது. இதன் படி, வரவிருக்கும் புதிய Vivo Y22 ஸ்மார்ட்போன் மேலே குறிப்பிடப்பட்ட விவரக்குறிப்புகளுடன் இந்தியாவில் சுமார் ரூ. 12,000 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ ரசிகர்கள் இந்த போனிற்காக வெயிட் செய்யலாமா?

விவோ ரசிகர்கள் இந்த போனிற்காக வெயிட் செய்யலாமா?

இந்த சாதனம் அடுத்த வாரம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வரும் என்று ஊகிக்கப்படுகிறது. இது ஸ்டார்லைட் ப்ளூ மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு தரமான கேமரா அம்சத்துடன் பட்ஜெட் விலையில் இருந்து குறைந்த விலையில் ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், கட்டாயமாக அடுத்த வாரம் வரை காத்திருந்து இந்த புதிய Vivo Y22 மாடலை நீங்கள் வாங்கலாம். அதிகாரப்பூர்வ அறிமுக தேதி பற்றிய விபரங்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Vivo Y22 Price Specification and Launch Timeframe Details In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X