Vivo Y20T இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா? பெஸ்டான அம்சம்..

|

விவோ ஒய் 20 டி ஸ்மார்ட்போன் சாதனம் திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவோ ஒய் சீரிஸ் தொடர் வரிசை ஸ்மார்ட்போனில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது சீன நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட ரேம் 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது ரேம் செயல்பாடுகளுக்காக தொலைப்பேசியின் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தில் 1 ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Vivo அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்

Vivo அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது இரண்டு வண்ணங்கள் மற்றும் ஒற்றை உள்ளமைவில் வழங்கப்படுகிறது. இந்த கைபேசியில் AI டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபர தகவலைப் பார்க்கலாம்.

இந்தியாவில் விவோ ஒய் 20 டி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் விவோ ஒய் 20 டி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ Y20T விலை பற்றி பார்க்கையில், விவோ நிறுவனம் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 15,490 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ப்யூரிஸ்ட் ப்ளூ நிறங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது Vivo India E-store, Amazon, Flipkart, Paytm, Tata Cliq, Bajaj Finserv மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. EMI மூலம் வாங்கவும் மற்றும் அனைத்து பார்ட்னர் சில்லறை கடைகள் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது.

இந்த மிரட்டலான Itel S17 போனின் விலை இது தானா? இவ்வளவு மலிவாக போன் அறிமுகமா?இந்த மிரட்டலான Itel S17 போனின் விலை இது தானா? இவ்வளவு மலிவாக போன் அறிமுகமா?

விவோ Y20T ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச தகவல்

விவோ Y20T ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச தகவல்

இது டூயல் நானோ சிம் விருப்பத்துடன் வருகிறது. விவோ ஒய் 20 டி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடன் இயக்குகிறது. இது 6.51' இன்ச் எச்டி+ கொண்ட 720 x 1,600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஹாலோ ஃபுல்வியூ அம்சத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இது 64 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) ஆதரிக்கிறது.

மல்டி டர்போ 5.0 உடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிறதா?

மல்டி டர்போ 5.0 உடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிறதா?

கேமிங் ஆர்வலர்களுக்கு, விவோ ஒய் 20 டி அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன் மற்றும் கேம் பிக்சர்-இன்-பிக்சர் ஆகியவற்றுடன் மல்டி டர்போ 5.0 உடன் வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ ஷூட்டர் மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மலிவு விலையில் தினமும் 1ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..மலிவு விலையில் தினமும் 1ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

முன்பக்கத்தில், Vivo Y20T இல் உள்ள நாட்சில் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது, அதில் f/1.8 துளை உள்ளது. முன் கேமரா ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் போர்ட்ரேட் மோட் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5 மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.

பேட்டரி அம்சம்

பேட்டரி அம்சம்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, இது 164.41x76.32x8.41 மிமீ மற்றும் 192 கிராம் எடை கொண்டது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் நபர்கள் மேலே குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களில் பார்வையிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y20T With Extended RAM Launched in India Know Price And Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X