ரூ.10,990 மட்டுமே: 5000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு விவோ ஒய்15எஸ் இந்தியாவில் அறிமுகம்!
டூயல் ரியர் கேமராக்கள் கொண்ட விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

டூயல் ரியர் கேமராக்கள் கொண்ட விவோ ஒய்15எஸ்
டூயல் ரியர் கேமராக்கள் கொண்ட விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனமானது இந்தியாவில் ரூ.10,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. விவோ ஒய்15எஸ் (2021) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விவோ ஃபோன் வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்போடு அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் இன் ஆண்ட்ராய்டு கோ பதிப்பு
விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போனானது கூகுள் இன் ஆண்ட்ராய்டு கோ பதிப்பு அடிப்படையாக கொண்டு இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு-ன் நெறிப்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. விவோ ஒய்15 எஸ், மோட்டோ இ40 மற்றும் ரெட்மி 10 பிரைம் போன்ற சாதனங்களின் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
இந்தியாவில் விவோ ஒய்15எஸ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், விவோ ஒய்15எஸ் சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இந்திய விலை மதிப்புப்படி ரூ.10,990 என கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மிஸ்டி ப்ளூ மற்றும் வேவ் க்ரீன் வண்ணங்களில் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் நாட்டிள் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் வெள்ளிக்கிழமை முதல் வாங்குவதற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் சிங்கப்பூரில் ரூ.10,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்
விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடனான ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) உடன் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் உடனான ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரவுகளுக்கு என விவோ ஒய்15எஸ் ஸ்மார்ட்போனானது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்ல் மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது. லென்ஸ் மற்றும் வீடியோ வசதிகளுக்கு என விவோ ஒய் 15 எஸ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி
விவோ ஒய்15 எஸ் ஸ்மார்ட்போனானது பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இதில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி5.0, எஃப்எம் ரேடியோ, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. விவோ ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் எடை 179 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications