சத்தமில்லாமல் Vivo Y12s மற்றும் Vivo Y1s ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்த விவோ..

|

விவோ நிறுவனம் தற்பொழுது அதன் Vivo Y12s மற்றும் Vivo Y1s ஸ்மார்ட்போன்களின் விலையைச் சத்தமில்லாமல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை அதிகரிப்பிற்குப் பின்னர் Vivo Y12s மற்றும் Vivo Y1s ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் புதிய விலை என்ன என்பதைப் பார்க்கலாம்.

சத்தமில்லாமல் Vivo Y12s & Vivo Y1s விலை அதிகரிப்பு..

இந்த திடீர் விலை அதிகரிப்பு தொடர்பாக விவோ நிறுவனம் இதுவரை எந்தவொரு தகவலையும் அறிவிக்கவில்லை. ஆனால், சத்தமில்லாமல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மீதும் ரூ.500 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அமேசான் பட்டியல் தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல், சில்லறை விற்பனையாளர் கடைகள் மற்றும் விவோவின் பிரத்தியேக கடைகளிலும் இந்த புதிய விலை அதிகரிப்பு அமலுக்கு வந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Vivo Y12s ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 8,490 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த Vivo Y12s ஸ்மார்ட்போனின் இதே வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 7,990 என்ற விலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விவோ நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ரூ.500-ஐ அதிகரித்துள்ளது.

Vivo Y1s ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 10,490 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த Vivo Y12s ஸ்மார்ட்போனின் இதே வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 9,990 என்ற விலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விவோ நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ரூ.500-ஐ அதிகரித்துள்ளது.

சத்தமில்லாமல் Vivo Y12s & Vivo Y1s விலை அதிகரிப்பு..

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் விவோ Y73 மாடல் ஆனது பிளிப்கார்ட், விவோ.காம் போன்ற வலைத்தளங்கில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடல் Diamond Flare மற்றும் Roman Black நிறங்களில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.20,990 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Vivo y12s and Vivo y1s smartphones silently get Rs 500 price hike in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X