தாராளமா வெயிட் பண்ணுங்க: பக்கா கேமரா ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வரும் Vivo!

|

Vivo X90, X90 Pro, X90 Pro+ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் ரேம், இன்டெர்னல் ஸ்டோரேஜ், கலர்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல்கள் ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

Vivo X90 சீரிஸ்

Vivo X90 சீரிஸ்

Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனானது விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த சீரிஸ் இல் விவோ எக்ஸ்90, விவோ எக்ஸ்90 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். அறிமுகத்திற்கு முன்னதாகவே, விவோ எக்ஸ்90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இன்டர்னல் ஸ்டோரேஜ், கலர்கள் மற்றும் ரெண்டர்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.

நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம்

நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம்

விவோ நிறுவனம் கடந்த சில காலமாகவே Vivo X90 சீரிஸ் ஸ்மார்ட்போனில் வேலை செய்து வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பக் கட்டமாக சீனாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டாலும் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்

எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்

ஆரம்பத்தில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்கள் களமிறக்கிய விவோ, சமீப காலமாக புது அறிமுகத்தில் தொய்வு காட்டி வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில் விவோ ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் விவோ எக்ஸ்90 சீரிஸ் அறிமுகமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

3 வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள்

3 வேரியண்ட் ஸ்மார்ட்போன்கள்

விவோ எக்ஸ்90 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல் சமீபகாலமாகவே கசிந்த வண்ண இருக்கிறது. இவை அனைத்தும் ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கிறது. Vivo X90, Vivo X90 Pro மற்றும் Vivo X90 Pro+ ஆகியவற்றின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், வண்ண விருப்பங்கள் உள்ளிட்டவைகள் லீக் ஆகி இருக்கிறது. Vivo X90 Pro+ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் கீக்பெஞ்சில் முன்னதாக வெளியானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

விவோ எக்ஸ்90 வேரியண்ட்

விவோ எக்ஸ்90 வேரியண்ட்

விவோ எக்ஸ்90 சீரிஸ் குறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனின் வெண்ணிலா பதிப்பு நான்கு மெமரி வகைகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Vivo X90 Pro வேரியண்ட்

Vivo X90 Pro வேரியண்ட்

அதேபோல் Vivo X90 Pro ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் கூறுகிறது.

இந்த தொடரில் டாப் என்ட் மாடலாக Vivo X90 Pro+ இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

Vivo X90 Pro+ சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro+ சிறப்பம்சங்கள்

Vivo X90 Pro+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது குவாட் HD+ தெளிவுத்திறன் மற்றும் 144Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் இ6 அமோலெட் எல்டிபிஓ பேனல் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியானது. இதில் 50MP 1-இன்ச் Sony IMX989 சென்சார், 48MP Sony IMX598 அல்ட்ரா-வைட் கேமரா, OIS உடன் 50MP Sony IMX578 போர்ட்ரெய்ட் கேமரா, மற்றும் 64MP OmniVision OV64A கேமரா என பல மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32எம்பி செல்ஃபி ஷூட்டர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

சார்ஜிங் விவரம்

சார்ஜிங் விவரம்

Vivo X90 Pro+ பேட்டரி ஆதரவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 80 வாட்ஸ் வயர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் 4700 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் புது ஸ்மார்ட்போன் வாங்கலாம் என திட்டமிட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo X90, X90 Pro, X90 Pro+ might be Launching with these Specs: Should You Wait For this?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X