Just In
- 20 min ago
இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!
- 1 hr ago
FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?
- 2 hrs ago
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
- 2 hrs ago
தினமும் Fast Charging செய்வதன் பின்னணியில் உள்ள பேராபத்து! இதுல 240W வேற?
Don't Miss
- News
செம ட்விஸ்ட்.. திருமாவளவன் கண்ணாடி முன்னாடி நின்று.. ஸ்டாலினுக்கும் செக்.. ரவுண்டு கட்டும் பாஜக
- Finance
கொரோனாவுக்கும் தங்கம்.. கல்விக்கும் தங்கம்..!
- Movies
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
- Automobiles
எங்கயோ மச்சம் இருக்கு... கணவருக்காக சர்ச்சை நடிகை செய்த காரியம்... நமக்கு இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குதே!
- Lifestyle
மேஷம் செல்லும் செவ்வாயால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
- Sports
ருத்துராஜுக்கு தண்டனை கொடுத்தாரா ஹர்திக்.. திரும்பவும் அந்த சிக்கல் வந்தது.. உண்மையில் நடந்தது என்ன
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
விவோ எக்ஸ்80 தொடர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 25 முதல் விற்பனை வருகிறது. விவோ எக்ஸ் 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 50 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வெளியிடப்பட்டது. விவோ எக்ஸ் 80 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போன்களானது உயர்தர அம்சங்களோடு ப்ரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ எக்ஸ் 80 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 80
விவோ எக்ஸ் 80 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஒரு ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது சமீபத்தில் சீனா மற்றும் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வெண்ணிலா விவோ எக்ஸ்80 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி மற்றும் விவோ எக்ஸ் 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு இந்தியாவுக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் Zeiss உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட இமேஜிங் அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனானது சினிமா ஸ்டைல் பொக்கே, சினிமாடிக் வீடியோ பொக்கே மற்றும் 30 டிகிரி அடிவான நிலை போன்ற அம்சங்களை கொண்டு வருகிறது.

விவோ வி1+ இமேஜிங் சிப் வசதி
பிரத்யேக விவோ வி1+ இமேஜிங் சிப் வசதியோடு வருகிறது. இது சிறந்த குறைந்த ஒளி புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபிக் ஏஐ வீடியோ மேம்படுத்தலைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விவோ எக்ஸ் 80, விவோ எக்ஸ் 80 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த எக்ஸ் 80 ப்ரோ சாதனத்தின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.79,999 எனவும் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.54,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

காஸ்மிக் பிளாக் மற்றும் அர்பன் ப்ளூ வண்ண விருப்பம்
விவோ எக்ஸ் 80 ப்ரோ ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் வண்ணத்தில் கிடைக்கும் அதேபோல் விவோ எக்ஸ் 80 ஸ்மார்ட்போனானது காஸ்மிக் பிளாக் மற்றும் அர்பன் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இந்த இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களும் மே25 முதல் விற்பனைக்கு வரும். இந்த சாதனங்கள் பிளிப்கார், விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ சிறப்பம்சங்கள்
விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 2கே (1,440x3,200 பிக்சல்கள்) தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் வரையிலான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி சோனி பிரைமரி கேமரா
விவோ எக்ஸ்80 ப்ரோ ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிஎன்வி முதன்மை கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைட் சோனி ஐஎம்எக்ஸ் 598 ஷூட்டர், 12 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 663 சென்சார்கள் மற்றும் 8 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் என குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, என்எஃப்சி மற்றும் இன்ஃப்ராரெட் (ஐஆர்) பிளாஸ்டர் வயர்லெஸ் இணைப்பு விருப்பங்கள் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4700 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதியோடு இருக்கிறது. இந்த சாதனம் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சத்துக்கு என ஐபி68 மதிப்பீடு இதில் இருக்கிறது.

விவோ எக்ஸ்80 சிறப்பம்சங்கள்
விவோ எக்ஸ்80 ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) தெளிவுத்திறன் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்866 ஆர்ஜிபிடபிள்யூ லென்ஸ், 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 12 எம்பி போர்ட்ரெய்ட் சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பி ஷூட்டர் ஆதரவு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஆரிஜின் ஓஎஸ் ஓஷன் ஸ்கின் ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவோடு வருகிறது. விவோ எக்ஸ்80 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்ப ஆதரவு இருக்கிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999