IPL போட்டிக்கு முன்னதாக அறிமுகமாகிறதா புதிய Vivo X70 Pro+ ஸ்மார்ட்போன்?
விவோ நிறுவனத்தின் அடுத்த புது வரவான விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தின் இந்திய வேரியன்ட் மாடல் எண் வி 2114 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலைப் பிரபலமான டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் சனார்ட்போன் 12 ஜிபி ரேம் உடன் கூகிள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டுள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் சில சுவாரசியமான தகவல்களையும் இணையத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Vivo X70 சீரிஸ் தொடர் இந்தியாவில் அறிமுகமா?
விவோ நிறுவனத்தின் Vivo X70 சீரிஸ் தொடர் சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் Vivo X70, Vivo X70 Pro மற்றும் Vivo X70 Pro+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எக்ஸ் 70 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதத்தில் எப்போதாவது இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று வதந்தி பரவி வருகிறது. இப்போது விவோ X70 ப்ரோ பிளஸ் இன் இந்திய மாறுபாடு கூகிள் பிளே கன்சோலில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் மாடல்
Vivo X70 Pro பிளஸ் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் கூகிள் பிளே கன்சோல் பட்டியல் மூலம் இணையத்தில் கசிந்துள்ளது. இது விவோ எக்ஸ் 70 சீரிஸ் சாதனங்கள் இந்தியாவில் தனது தொடரை விரைவில் தொடங்குவதையும் உறுதிப்படுத்துகிறது. டிப்ஸ்டர் முகுல் சர்மா கூகிள் பிளே கன்சோலில் விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் இன் இந்திய வகையை கண்டறிந்துள்ளார். இந்த புதிய ஸ்மார்ட்போன் மாதிரி எண் விவோ வி 2114 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள் என்ன?
Vivo X70 Pro பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் இதன் இயக்கப்படும் என்று பட்டியல் குறிப்புகள் தெரிவிக்கிறது. இது 12 ஜிபி ரேம் பேக் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும் என்று கூறப்படுகிறது. 440dpi உடன் கூடிய 1,080 x 2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவரக்குறிப்புகள் விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் சீனா மாறுபாட்டிற்கு ஒத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன மாடலுக்கும் இந்திய மாடலுக்கும் என்ன வித்தியாசம்?
சீனா மாடலுக்கு 1,440 x 3,200 பிக்சல் தீர்மானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ எக்ஸ் 70 வரம்பின் சீன மற்றும் இந்திய மாடல்களுக்கு இடையே வேறு ஏதேனும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை. கூகிள் பிளே கன்சோல் பட்டியலுடன் இணைக்கப்பட்ட பிளேஸ்ஹோல்டர் படம் வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. விவோ X70 புரோ பிளஸ் சற்று வளைந்த விளிம்புகள் மற்றும் திரையின் மேல் மையத்தில் வைக்கப்படும் கேமரா அமைப்பை பன்ச் ஹோல் டிஸ்பிளேவவுடன் காட்டுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ எக்ஸ் 70 ப்ரோ+, விவோ எக்ஸ் 70 வரம்பில் உள்ள மற்ற மாடல்களுடன், ஐபிஎல் 2021 போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், மற்றும் 55W ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரியை இது கொண்டிருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications