Vivo X70 Pro மற்றும் Vivo X70 Pro+ இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
விவோ எக்ஸ் 70 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை விவோ நிறுவனம் (இன்று) செப்டம்பர் 30 ஆம் தேதி வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய விவோ போன்களும் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகின்றது. இவை ஜீஸ் ஆப்டிக்ஸைக் கொண்டுள்ளன மற்றும் அல்ட்ரா-சென்சிங் கிம்பால் என்ற தனியுரிம பட உறுதிப்படுத்தல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பார்க்கலாம்.

விவோ X70 ப்ரோ மற்றும் விவோ X70 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் சக்தி எத்தகையது?
விவோ X70 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் விவோ X70 ப்ரோ+ குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ உடன் வருகிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ+ IP68 சான்றளிக்கப்பட்ட போன் மற்றும் 50W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 55W வயர்டு சார்ஜிங்கையும் அனுமதிக்கிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன், ஆசஸ் ROG போன் 5 மற்றும் ஒன்பிளஸ் 9 போன்றவற்றுடன் போட்டியிடும். அதேசமயம் விவோ எக்ஸ் 70 ப்ரோ+ சாதனம் சாம்சங் கேலக்ஸி எஸ் 21+ மற்றும் Mi 11 அல்ட்ரா போன்றவற்றுக்கு எதிராகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo X70 Pro, Vivo X70 Pro+ இந்தியாவில் விலை மற்றும் அறிமுக சலுகைகள்
இந்தியாவில் விவோ எக்ஸ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடிப்படை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 46,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 49,990 ஆக இருக்கிறது. இதன் 12 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 52,990 ஆக இருக்கிறது. வழக்கத்தைப் போல் ப்ரோ+ சாதனத்தின் விலை எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாக உள்ளது.

எப்போது மற்றும் எங்கு இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும்?
Vivo X70 Pro+ ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கான விலை ரூ. 79,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Vivo X70 Pro சாதனம் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் அரோரா டான் மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் விற்பனைக்கு வரும். அதே நேரத்தில் Vivo X70 Pro+ அக்டோபர் 12 ஆம் தேதி முதல் எனிக்மா பிளாக் வண்ணத்தில் கிடைக்கும். இரண்டு போன்களும் Flipkart, Vivo மூலம் வாங்க கிடைக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் கிடைக்கும்.

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ விவரக்குறிப்புகள்
இந்த ஸ்மார்ட்போன் 6.78' இன்ச் டபிள்யூ கியூஹெச்டி பிளஸ் உடன் 1,440 x 3,200 பிக்சல்கள் கொண்ட இ 5 அமோலேட் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. இது இரட்டை சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 இல் இயங்குகிறது. இது ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

கேமரா விபரம்
இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் f/1.6 அல்ட்ரா-வைட் லென்ஸ் கிம்பல் ஆதரவுடன், 12 மெகாபிக்சல் போர்ட்ரேட் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் ஒரு பெரிஸ்கோப் வடிவ லென்ஸ் மற்றும் OIS. விவோ அதே 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாரை விவோ எக்ஸ் 70 ப்ரோவில் கிடைக்கும் எஃப்/2.45 லென்ஸுடன் வழங்கியுள்ளது. Vivo X70 Pro+ ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட உள் சேமிப்பைக் கொண்டுள்ளது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் பேட்டரி விபரம்
இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS/ NavIC, IR பிளாஸ்டர் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ பிளஸ் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 55W வயர் ஃப்ளாஷ்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இது 50W வயர்லெஸ் ஃப்ளாஷ்சார்ஜ் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 164.54 × 75.21 × 8.89 மிமீ மற்றும் 213 கிராம் எடை கொண்டது.


Click it and Unblock the Notifications