ஒட்டுமொத்த OnePlus போன்களுக்கும் வேட்டு வைக்கும் விலை.. வெறியான அம்சங்களுடன் Vivo X100, Vivo X100 Pro!
விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்100 சீரீஸின் (Vivo X100 Series) கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்கள் இன்று (அக்.13) அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்100, விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் மாடல்கள் வெளியாகவுள்ளன.
விவோ எக்ஸ்100 சீரீஸ் உடன் சேர்த்து விவோவின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆக விவோ வாட்ச் 3 (Vivo Watch 3) மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விவோ எக்ஸ்100, விவோ எக்ஸ்100 ப்ரோ மற்றும் விவோ வாட்ச் 3-யின் விலை நிர்ணயம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

சீன சமூக ஊடகத்தளமான வெய்போ (Weibo) வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, விவோ எக்ஸ்100 (Vivo X100) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 3,999 யுவானுக்கும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.46,320 க்கும்), 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.54,460 க்கும் அறிமுமாகும்.
மறுகையில் உள்ள விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 4,999 யுவானுக்கும் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.457,900 க்கும்), 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.66,00 க்கும் அறிமுமாகும்.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ்100 மற்றும் 100எக்ஸ் ப்ரோ ஆகிய இரண்டுமே ஸ்டார் டிரெயில் ப்ளூ (Star Trail Blue), சன்செட் ஆரஞ்சு (Sunset Orange), ஒயிட் மூன்லைட் (White Moonlight) மற்றும் செய்ன் பிளாக் (Cheyne Black) போன்ற ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம், இதற்கு முன்னதாக அறிமுகமான விவோ எக்ஸ்90 (Vivo X90) மாடலானது இந்தியாவில் தற்போது ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜுன் விலையாகும். இதேபோல விவோ எக்ஸ்90 ப்ரோவின் (Vivo X90 Pro) சிங்கிள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,895 க்கு வாங்க கிடைக்கிறது.

எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ ஆகிய இரண்டுமே டைமன்சிட்டி 9300 சிப்செட்டை (Dimensity 9300 Chipet) கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும். மேலும் லேட்டஸ்ட் எல்டிடிஆர்டி ரேம் தொழில்நுட்பத்துடன் (LDDR5T RAM technology) கூடிய முதல் ஸ்மார்ட்போன்களாகவும் அறிமுகமாகும்.
கடைசியாக விவோவின் புதிய 100எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது புதிய ஒரிஜின்ஓஎஸ் 4 (OriginOS 4) அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் வரும் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன்களாகவும் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் அறிமுகமான ஐக்யூ 12 சீரீஸ் (iQOO 12 Series) ஸ்மார்ட்போன்களிலும் கூட இதே ஓஎஸ்-ஐ கொண்டுதான் இயக்கப்படுகின்றன.
இன்று சீனாவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ்100 சீரிஸின் உலகளாவிய வெளியீடு (Global Launch) 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைக்கு வர இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று அர்த்தம்.
கடைசியாக விவோ வாட்ச் 3 மாடலின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது 1,299 யுவானுக்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ,15,050 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். விவோவின் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சும், எக்ஸ்100 சீரிஸின் ஹை-எண்ட் மாடலான விவோ எக்ஸ்100 ப்ரோ பிளஸ் (Vivo X100 Pro Plus) ஆகிய இரண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Photo Courtesy: @stufflistings / X


Click it and Unblock the Notifications