Home
News

வாரி வழங்கும் விலை.. ஒரே வீச்சில் ரூ.5000 தள்ளுபடி.. Vivo X100 இன் சலுகை விலை என்ன தெரியுமா?

விவோ (Vivo) நிறுவனம் திடீரென அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான விவோ X100 (Vivo X100) ஸ்மார்ட்போன் மீது நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5000 அதிரடியாக குறைந்துள்ளது.

Vivo X100 ஸ்மார்ட்போன் சாதனத்தை விவோ நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது நிறுவனம் நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான விவோ X100 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5000 வரை குறைந்துள்ளது. சரி, இது பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

Vivo X100: வாரி வழங்கும் விலை.. ஒரே வீச்சில் ரூ.5000 தள்ளுபடி..

Vivo X100: ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் ரூ. 60,000 விலை புள்ளியில் அறிமுகம் செய்தது. இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால், இந்த விவோ X100 ஸ்மார்ட்போன் சாதனம் 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முதன்முதலில் ரூ. 63,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் ஹை-எண்டு மாடலான 16GB + 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்தியாவில் ரூ. 69,999 என்ற விலையில் வெளியிடப்பட்டது. இத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி உடன் இந்த சாதனத்தின் விலை இன்னும் கணிசமாக குறைந்தது. விவோ X100 (Vivo X100) பிரீமியம் கிரேடு சாதனத்தின் விலை இதனால், ரூ.60,000 ரூபாய் ஆக குறைந்தது.

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது இந்த சாதனம் இன்னும் கணிசமான விலை குறைப்பை ஒரு சிறப்பு சலுகையில் மூலம் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இந்த விவோ X100 (Vivo X100) ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5000 நேரடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன் மூலம் விவோ X100 (Vivo X100) சாதனத்தின் 2 வேரியண்ட் மாடல்களும் முறையே ரூ.58,999 மற்றும் ரூ.64,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விவோ X100 (Vivo X100) ஸ்மார்ட்போன் சாதனம் நோ-காஸ்ட் விருப்பத்துடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக் மற்றும் ப்ளூ நிறங்களில் இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் அளவு கொண்ட LTPO AMOLED FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 9300 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் ஆதரிக்கிறது.

கேமரா பற்றி பேசுகையில், இது 50MP ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5.4, NFC, GPS, WiFi 7 போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. ரூ.5000 தள்ளுபடியுடன் உடனே இந்த விவோ X100 ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo X100 gets a Rs 5,000 discount in India on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X