100 பெருசா.. இல்லை 12 பெருசா.. ஜனவரியில் மொபைல் போர்.. 2024ல் நேருக்குநேர் மோதும் Vivo vs OnePlus.. எது வின்?
விவோ (Vivo) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) ஆகிய நிறுவனங்கள் அதன் சிறந்த ஸ்மார்ட்போன் (Best Smartphone) சாதனங்களை இந்த ஜனவரி (January) மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிறுவனங்கள் இரண்டும் தலா இரண்டு சாதனங்களை இந்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளன.
விவோ (Vivo) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) அறிமுகம் செய்யும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விபரங்களை மற்றும் இந்திய அறிமுக தேதி குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) சாதனம் மற்றும் ஒரு பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (Budget Segment Smartphones) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நிறுவனம் அதன் பட்டியலின் கீழ் புதிதாக விவோ எக்ஸ்100 (Vivo X100) என்ற சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் விவோ X100 (Vivo X100) மற்றும் விவோ X100 ப்ரோ (Vivo X100 Pro) என்று இரண்டு சாதனங்களை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு இந்தியாவில் வரும் ஜனவரி 4ம் தேதி (Vivo X100 Launch Date) நடைபெறுகிறது.
மறுபுறம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவின் கீழ், புதிதாக ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் கீழ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்கிறது. இதன் இந்திய அறிமுக தேதி ஜனவரி 23ம் தேதி (OnePlus 12 Launch Date) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் விவோ X100 (Vivo X100 Price) சாதனத்தை 12ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் உடனும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடனும் அறிமுகம் செய்கிறது. இதன் விலை முறையே ரூ.63,999 மற்றும் ரூ.69,999 என்ற விலையை நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.89,999 விலையில் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் (OnePlus 12 Price) 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடை வெளிவரும். இதன் விலை ரூ.58,000 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் (OnePlus 12R Price) சாதனம் 12ஜிபி ரேம் / 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.38,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2024ம் புது ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் இரண்டு முன்னணி பிராண்டுகளின் பிளாக்ஷிப் சாதனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் மட்டும் பட்ஜெட் பிரிவு மக்களுக்கான ஒரு எக்ஸ்ட்ரா சாதனத்தை கொண்டுள்ளது. விலை அடிப்படையில் பார்க்கையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் மிரட்டலான பிளாக்ஷிப் சாதனத்தை ரூ.58,000 விலைக்கு வழங்குகிறது.
இதனால், மக்கள் அதிகமாக ஒன்பிளஸ் போனை வாங்க வாய்ப்புள்ளது. காரணம், விவோ ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.64,000 விலை புள்ளியில் கிடைக்கிறது என்பதனால், இதன் விலையை வைத்து இதன் விற்பனையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அம்சங்களை பொறுத்த வரை இரண்டு சாதனங்களும் மேம்படுத்தப்பட்ட உயர் தர அம்சங்களை பேக் செய்துள்ளன.


Click it and Unblock the Notifications