நாங்க மட்டும் ஒன்னும் சும்மா இல்ல.! Vivo X Fold Plus போல்டபிள் போனுடன் கர்ஜிக்க துடிக்கிறதா Vivo?

|

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக ஒரு கலாச்சாரம் உருவாகி, வேகமாக முன்னேறி வருகிறது என்றால், அது மடக்கக்கூடிய 'போல்டபிள் ஸ்மார்ட்போன்' மாடல்களாகும். ஆம், சாதாரண ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டுத் தனித்த டிஸைனுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு தான் இப்போது உலகளவில் மவுசு அதிகரித்து வருகிறது. Samsung, Xiaomi, Honor, Huawei போன்ற நிறுவனங்களுடன் இப்போது Vivo நிறுவனமும் அதன் போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

Apple மற்றும் Google கூட போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதா?

Apple மற்றும் Google கூட போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதா?

தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் நிறுவனம் கூட சைலெண்டாக ஒரு புதிய போல்டபிள் ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக வதந்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல், Google நிறுவனம் கூட வரும் 2023 இல் ஒரு புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இதெல்லாம் வெளிவர இன்னும் அதிக காலம் இருக்கிறது. இப்போது, மிக விரைவில் வெளிவர தயாராகும் விவோ எக்ஸ் ஃபோல்ட் பிளஸ் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தமுறை விவோ அதன் போல்டபிள் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யுமா?

இந்தமுறை விவோ அதன் போல்டபிள் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யுமா?

Vivo இந்த ஆண்டின் இறுதியில் ஒரு புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவோ தனது முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலான விவோ எக்ஸ் ஃபோல்டை சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் இந்தியாவிற்கு வராமல் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியது. ஆனால், இந்த முறை விவோ அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

விவோ எக்ஸ் ஃபோல்ட் பிளஸ் போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

விவோ எக்ஸ் ஃபோல்ட் பிளஸ் போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திய வெளியீட்டு விவரங்கள் குறித்து Vivo இன்னும் உறுதியாக என்பதைத் தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விவோவின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் ஃபோல்ட் பிளஸ் என்ற பெயரில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது. இந்த குறிப்பிட்ட போல்டபிள் ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக எக்ஸ் ஃபோல்ட் எஸ் என லீக் தகவலில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivo X Fold Plus போனின் டிஸ்பிளே சிறப்பம்சம்

Vivo X Fold Plus போனின் டிஸ்பிளே சிறப்பம்சம்

புதிய Vivo X Fold Plus போனின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கையில், இது அட்டகாசமான டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமக்குக் கிடைத்த தகவலின் படி, இந்த சாதனம் 8.03' இன்ச் கொண்ட மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே மற்றும் வெளிப்புறத்தில் 6.53' இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 2 டிஸ்பிளேக்களும் 120Hz ரெஃபிரெஷ் ரேட் வீதத்தை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

புதிய Vivo X Fold Plus போனில் எத்தனை கேமரா வருகிறது?

புதிய Vivo X Fold Plus போனில் எத்தனை கேமரா வருகிறது?

விவோ அறிமுகம் செய்யவிருக்கும் இந்த புதிய Vivo X Fold Plus பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது. இந்த குவாட் ரியர் கேமரா அமைப்பில் 50MP பிரைமரி கேமரா சென்சார், 2x ஜூம் கொண்ட 12MP போர்ட்ரெய்ட் கேமரா சென்சார், 48MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 8MP பெரிஸ்கோப் கேமரா போன்றவற்றைக் கொண்டிருக்கும். இதன் முன்பக்கத்தில் 16MP செல்பி சென்சார் கொண்டிருக்கும் என்று அந்த தகவல் சுட்டிக்காட்டியுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கூட இருக்கா?

பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கூட இருக்கா?

இந்த புதிய Vivo X Fold Plus சாதனம் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வெளிவரும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய விவோ எக்ஸ் ஃபோல்ட் பிளஸ் டிவைஸ் 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் சற்று பெரிய 4700mAh பேட்டரியை பேக் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த போனின் விலை விபரங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதனால், அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை நாம் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Vivo X Fold Plus Foldable Smartphone Launch Tipped With Display Camera Specifications Before Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X