Home
News

அதிருது இந்திய மார்க்கெட்.. 6000mAh பேட்டரி.. 8.03 இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்..

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ் போல்டு 5 (Vivo X Fold 5) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ எக்ஸ் போல்டு 5 போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ் போல்டு 5 அம்சங்கள் (Vivo X Fold 5 Specifications): 8.03-இன்ச் இன்னர் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 2480 x 2200 பிக்சல்கள், யூடிஜி கிளாஸ் (UTG Glass) புரொடெக்சன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசல்யூஷன், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதிருது இந்திய மார்க்கெட்.. அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்..

அதேபோல் 6.53 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கவர் அமோலெட் டிஸ்பிளே வசதியும் இந்த போனில் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2748 x 1172 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

விவோ எக்ஸ் போல்டு 5 போன் 50 எம்பி மெயின் கேமரா (Sony IMX921 sensor) + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா (Sony IMX882) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் 15எம்எம் போகல் லென்த், 3X ஆப்டிகல் ஜூமிங், ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. டூயல் 5ஜி, புளூடூத் வி5.4, வைஃபை 802.11 ஏஎக்ஸ், ஜிபிஎஸ், நேவிக், க்ளோனஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) போனில் உள்ளது.

4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (4nm Octa Core Snapdragon 8 Gen 3) சிப்செட் விவோ எக்ஸ் போல்டு 5 மாடலில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் விவோ எக்ஸ் போல்டு 5 இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IPX9 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

அதிருது இந்திய மார்க்கெட்.. அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்..

6000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ் போல்டு 5 மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W வயர்டு சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) ஆதரவும் இந்த போனில் உள்ளது. டைட்டானியம் க்ரே (Titanium Grey) நிறத்தில் இந்த போனை வாங்கலாம்.

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ் போல்டு 5 போனின் விலை ரூ.1,49,999-ஆக உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி முதல் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் இ பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo X Fold 5 launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X