தினுசா ஒரு டிசைன்! மாஸ்-ஆ 2 டிஸ்பிளேவுடன் என்ட்ரி கொடுக்க ரெடியாகும் புது Vivo X Flip Phone!
பார்ப்பதற்கே விநோதமாகவும், விசித்திரமாகவும் இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை தான் அடுத்து உலகமே வியந்து பார்க்கப்போகிறது. விவோ (Vivo) நிறுவனத்தின் அடுத்த மாஸ் தயாரிப்பு தான் இந்த புதிய Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனமாகும். இது ஏன் ஸ்பெஷலென்று பார்க்கலாமா?
ஸ்மார்ட்போன் சந்தை இப்போது முன்பை போல் இல்லை, வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்கள் மக்களுக்கு போர் அடித்துவிட்டது. தாங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் சில புதுமையை ஒவ்வொரு பயனரும் விரும்புகின்றனர். வழக்கமான ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு நடுவே இப்போது மடிக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனங்களின் வருகை பெருகிவிட்டது.

ஆப்பிள் (Apple), கூகுள் (Google), ஒப்போ (Oppo), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), டெக்னோ (Tecno) மற்றும் பல பிராண்டுகள் இப்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றன. சில முக்கிய நிறுவனங்கள் அதன் போல்டபில் சாதனங்களை வேகமாக உருவாக்கி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது விவோ நிறுவனம் அதன் வித்தியாசமான விவோ எக்ஸ் ஃபிலிப் ஃபோல்டபில் ஸ்மார்ட்போனை ரெடி செய்துவிட்டது.
விவோவின் வரவிருக்கும் Vivo X Flip போல்டபில் போன், செங்குத்தாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக தரப்படுத்தல் வலைத்தளமான கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது. Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சில் மாடல் எண் V2256A உடன் காணப்பட்டுள்ளது. இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் உடன் இயங்குவதை கீக்பெஞ்சு பட்டியல் விபரம் காண்பிக்கிறது.
Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம், 50 எம்பி சோனி IMX8606 பிரைமரி கேமராவை கொண்டிருக்கும். இது 6.8' இன்ச் 120 ஹெர்ட்ஸ் மெயின் டிஸ்ப்ளே மற்றும் மேல் மூடியில் இரண்டாம் நிலை சிறிய டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் சிங்கிள்-கோர் சோதனையில் 1,695 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 4,338 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் இயங்கும் என்பதை பட்டியல் விபரம் காண்பிக்கிறது. Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த சாதனம் FHD+ தெளிவுத்திறனுடன் மடிக்கக்கூடிய 6.8' இன்ச் 120Hz பிரைமரி டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும்.
இந்த Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போனின் 2வது டிஸ்பிளே HD தெளிவுத்திறனுடன் மேல் மூடியில் இருக்கிறது. கேமரா அம்சம் பற்றி பார்க்கையில், 50எம்பி சோனி IMX866 மெயின் சென்சார் மற்றும் 12எம்பி IMX663 அல்ட்ரா-வைட் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கேமராக்களை Zeiss மூலம் விவோ டியூன் செய்யும் என்று மற்றொரு சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது. இது ஒரு பன்ச் ஹோல் கட்அவுட் உடன் முன்பக்க கேமராவை கொண்டிருக்கும்.
Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனம் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கீக்பெஞ்சு தகவல் குறிப்பிடுகிறது. Vivo X Flip போல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விபரங்கள் நமக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. அடுத்த விபரம் வெளிவரும் பொழுது, உங்களை உடனே அப்டேட் செய்கிறோம். இந்த போனின் வடிவமைப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








