Home
News

அன்லிமிடெட் வாட்ச் பேஸ்.. AI அம்சம்.. செதுக்கி செதுக்கி Vivo உருவாக்கிய புது ஸ்மார்ட்வாட்ச்.. எந்த மாடல்?

இப்போது வரை விற்பனையில் உள்ள ஸ்மார்ட்வாட்ச்களில் (smartwatch) வெறும் 100 முதல் 150 வரையிலான வாட்ச் பேஸ் முகங்களை மட்டுமே நம்மால் மாற்ற முடியும். ஆனால், நீங்கள் இந்தவொரு ஸ்மார்ட்வாட்சை வாங்கினால், அன்லிமிடெட்டாக வாட்ச் பேஸை மாற்றலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?

நம்புங்கள் மக்களே.. இனி அன்லிமிடெட் ஆக எத்தனை வாட்ச் பேஸ்களை வேண்டுமானாலும் நீங்கள் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விவோ நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. விவோ என்றாலே நிச்சயம் நம்பகமானது என்ற மக்கள் நம்பிக்கை இந்த பிராண்ட் இந்தியாவில் பெற்றுள்ளது. இத்தகைய, நிறுவனம் இப்போது புதிதாக விவோ வாட்ச் 3 (Vivo Watch 3) என்ற ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

அன்லிமிடெட் வாட்ச் பேஸ்.. AI அம்சம்.. செதுக்கி செதுக்கி உருவான வாட்ச்!

இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை பற்றிய பல வியக்கத்தகு விஷயங்களை விவோ நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. அது என்னென்ன? இந்த வாட்சில் என்னென்ன அம்சங்கள் உள்ளது? என்பது போன்ற விஷயங்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம். விவோ தனது விவோ வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்சை நவம்பர் 17, 2023 அன்று அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக, விவோ நிறுவனம் வரவிருக்கும் ஸ்மார்ட்வாட்சுக்கான டிசைன் டீசரை வெளியிட்டுள்ளது. டீஸரில் விவோ வாட்ச் 3 சாதனத்திற்கான ரவுண்ட் டயலை புகைப்படம் தெளிவாக காண்பித்துள்ளது. ஸ்மார்ட்வாட்சின் வலது சட்டகத்தில் கிரௌன் பட்டனையும் நிறுவனம் வழங்கியுள்ளது. அதேபோல், இந்த புதிய விவோ வாட்ச் 3 சாதனத்தை நிறுவனம் பிளாக் மற்றும் வைட் (வெள்ளை) ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியிடும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த இரண்டு விவோ வாட்ச் 3 சாதனங்களும் தனித்தனி விதமான வாட்ச் ஸ்ட்ராப்களுடன் வருகிறது. விவோ வாட்ச் 3 இன் பிளாக் மாடல் வழக்கமான சிலிக்கான் ஸ்ட்ராப் உடன் வருகிறது. அதேபோல், இதன் வெள்ளை நிற மாடல் லெதர் பேண்ட் ஸ்ட்ராப் உடன் வருகிறது. இந்த விவோ வாட்ச் 3 சாதனத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓஎஸ் தான்.

ஆம், வரவிருக்கும் புதிய விவோ வாட்ச் 3 (Vivo Watch 3) சாதனம், நிறுவனத்தின் புதிய சுய-மேம்படுத்தப்பட்ட இயக்க முறைமையான ப்ளூஓஎஸ் (BlueOS) உடன் வருகிறது என்பதையும் Vivo உறுதிப்படுத்தியுள்ளது. ப்ளூஓஎஸ் என்பது ரஸ்ட் புரோகிராமிங் மொழியில் எழுதப்பட்ட உலகின் முதல் ஓஎஸ் ஆகும். இது பிரத்தியேகமான AI அம்சங்களையும் திறன்களையும் ஆதரிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, ப்ளூஓஎஸ் உடன் விவோ வாட்ச் 3 சாதனம் வரம்பற்ற வாட்ச் ஃபேஸ் ஆதரவை வழங்கும் என்றும் விவோ கூறியுள்ளது. அதேபோல், ப்ளூஓஎஸ் உடன் தனித்து செயல்படும் பிரத்தியேகமான வாட்ச் பேஸ் மொபைல் ஆப்ஸையும் இந்த வாட்ச் ஆதரிக்கும் என்று விவோ கூறியுள்ளது. இதற்கான ஆப் ஸ்டோரையும் விவோ அறிமுகம் செய்யுமென்று கூறியுள்ளது.

விவோ வாட்ச் 3 சாதனத்தின் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, விவோ வாட்ச் 3 ஓஎல்இடி (OLED) டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றிய கூடுதல் விவரங்கள் அதன் வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது நவம்பர் 17ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Watch 3 Comes With BlueOS Supports Unlimited Watch Face
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X