Home
News

மிரட்டிய விவோ: ரூ.1947 விலையில் விற்பனைக்கு வரும் விவோ வி9 & விவோ நெக்ஸ்.!

விவோ பிளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு வரும் விவோ வி9 மற்றும் விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன்களுடன் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளயிட்டுள்ளது, அதன்படி வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ ஃபீரிடம் கார்னிவல் ஆன்லைன் சேல் என்னும் தலைப்பில் சிறப்பு விறப்பனையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

ரூ.1947 விலையில் விற்பனைக்கு வரும் விவோ வி9 & விவோ நெக்ஸ்.!

மேலும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என்ற விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி, கூப்பன் டீல்கள்,கேஷ்பேக் சலுகைகள்
போன்றவற்றை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஃபீரிடம் கார்னிவல்

விவோ ஃபீரிடம் கார்னிவல்

மேலும் விவோ ஃபீரிடம் கார்னிவல் ஆன்லைன் சேல் சிறப்பம்சம் என்னவென்றால் விவோ நெக்ஸ் மற்றும் விவோ வி9 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.1947-க்கும், பின்பு யுஎஸ்பி கேபிள்கள் இயர்போன்கள் போன்றவற்றை ரூ.72-க்கும்
விற்பனை செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த ஃபிளாஷ் சேல் மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக்

கேஷ்பேக்

பின்பு இந்த சிறப்பு விற்பனையில் மற்ற விவோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.4000 வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சில விவோ ஸ்மார்ட்களுக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலவசம்

இலவசம்

விவோ பிளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு வரும் விவோ வி9 மற்றும் விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன்களுடன் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூப்பன்கள்

கூப்பன்கள்

விவோ ஃபீரிடம் கார்னிவல் மூலம் நீங்கள் வாங்கும் யுஎஸ்பி கேபிள்கள் மற்றும் இயர்போன்கள் வாங்குபவர்களுக்க ரூ.50 மதிப்புள்ள கூப்பன்களும் உயர் ரக இயர்போன்களுக்கு ரூ.200 மதிப்புள்ள கூப்பன்களும், பின்பு விவோ வி7 மற்றும்
விவோ வி7 பிளஸ் போன்கள் முறையே ரூ.2000 மற்றும் ரூ.3000-த்திற்கான கூப்பன்களும் வழங்கப்படவுள்ளன, மேலும் இந்த விற்பனை ஆகஸ்ட் 6 நண்பகல் பன்னிரண்டு மணிக்கு தொடங்குகிறது.

 சிஎம்ஒ ஜெரோமி சென்

சிஎம்ஒ ஜெரோமி சென்

விவோ நிறுவனத்தின் சிஎம்ஒ ஜெரோமி சென், தெரிவித்தது என்னவென்றால் இந்த சிறப்பு விற்பனை பல்வேறு மக்களுக்க பயன்படும் பின்பு விவோ அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களுடைய எழுபத்து இரண்டாவது சுதந்திர தினத்தை சிறப்பானதாக்க எண்ணியது என்றார்.

Best Mobiles in India

English summary
Vivo V9 Vivo Nex to Sell at Rs 1947 in Vivo Freedom Carnival Flash Sales: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X