இப்படி இருக்கனும் ஸ்மார்ட்போன்.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் மாடல்களுக்கு உலகளவில் வரவேற்பு இருக்கிறது. இந்தியாவிலும் விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பியது. ஆனால், முதலில் குளோபல் மார்கெட்டில் வெளியாகிய பிறகு இங்கு வந்தது. இதன்படி விவோ வி80 எப்இ (Vivo V80 FE) ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், இப்போது பிலிபைன்ஸ் மார்கெட்டில் சத்தமே இல்லாமல் வெளியாகி இருக்கிறது. ஒட்டுமொத்த பீச்சர்களும் தெரியவந்துள்ளன. அதேபோல ரேம், மெமரி வேரியண்ட்களும் உறுதியாகி இருக்கின்றன. ஆனால், விலை விவரங்கள் தெரியவில்லை. விரைவில் தெரியவரும். இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலும் இதே கிடைக்க வாய்ப்புள்ளது.

விவோ வி80 எப்இ அம்சங்கள் (Vivo V80 FE Specifications): 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 459 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கிறது. 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. பி3 வைடு கலர் காமட் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (Octa Core MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஓர்ஜின்ஓஎஸ் 7.0 (OriginOS 7.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது.
90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியுடன் இந்த விவோ வி80 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 50 எம்பி ஜீஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.
இந்த கேமாவில் ஜீஸ் ஆப்டிகல் மற்றும் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
7.76 எம்எம் தடிமன் மற்றும் 201 கிராம் எடையுடன் சில் கிரீன் (Chill Green) கலர் வேரியண்ட் மற்றும் 7.84 எம்எம் தடிமன் மற்றும் 202 கிராம் எடையுடன் ஸ்பார்க்லிங் கோல்டு (Sparkling Gold) வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. வை-பை 2.4ஜிஎச்இசட் மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. மேலும், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் விவோ வி80 ஸ்மார்ட்போன் வெளியாகியபோது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.62,999 ஆக இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999 ஆக இருந்தது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போன் வெளியாகினால், ரூ.55,000 முதல் ரூ.60,000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
