இந்திய சந்தையில் விவோ வி7 மீது ரூ.2 ஆயிரம் தள்ளுபடி

|

இந்திய சந்தையில் விவோ வி7 ஸ்மார்ட்போனுக்கான விலையில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்பீயை மையமாகக் கொண்டு ரூ.18,990 என்ற உண்மையான விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது ரூ.16,990-க்கு கிடைக்கிறது.

இந்திய சந்தையில் விவோ வி7 மீது ரூ.2 ஆயிரம் தள்ளுபடி

விவோ வி7 ஸ்மார்ட்போனுக்கான இந்த விலைக் குறைப்பு தள்ளுபடி, ஆன்லைனில் மட்டுமின்றி விற்பனையகங்களிலும் அளிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மெட்டி பிளாக், சாம்பயன் கோல்ட் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எனர்ஜிடிக் ப்ளூ என்ற மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட போது, ஆன்லைனில் ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் மற்றும் பேடியம் வழியாகவும் கிடைக்கிறது.

விவோ வி7 ஸ்மார்ட்போன், முனை விளிப்பு திரை உடன் முழுமையான ஒரு உலோக அமைப்பை பெற்றுள்ளதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். ஒரு 5.7 இன்ச் ஐபிஎஸ் முழுஅளவு திரையைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மூலம் 1,440X720 பிக்ஸல் பகுப்பாய்வு கொண்ட ஹெச்டி படங்களை அளிக்க முடியும் என்பதோடு, 18:9 விகித தன்மையைக் கொண்டது.

விவோ வி7 ஸ்மார்ட்போனின் உள்ளான விஷயங்களைப் பார்த்தால், இது ஒரு 64-பிட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு காணப்படுகிறது. இந்த கொள்ளளவை ஒரு மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 256ஜிபி ஆக உயர்த்த முடியும்.

இந்த விவோ வி7 ஸ்மார்ட்போனின் முக்கியம்சம் என்று பார்த்தால், ஒரு தனித்தன்மையுள்ள எப்/2 உடன் கூடிய அதன் 24எம்பி மூன்லைட் செல்ஃபீ கேமரா ஆகும். இந்த செல்ஃபீ கேமராவில், பேஸ் பியூட்டி 7.0, இயற்கை தாக்கம் (நேச்சுரல் எஃப்பேக்ட்) மற்றும் போர்ட்ரைட் மோடு போன்ற பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.

அடேங்கப்பா.. ரூ.15,700/- என்கிற விலையை பெற்றுள்ள ரெட்மீ நோட் 5.!அடேங்கப்பா.. ரூ.15,700/- என்கிற விலையை பெற்றுள்ள ரெட்மீ நோட் 5.!

பயனர் ஒரு வீடியோ அழைப்பில் இருந்தால் கூட, பேஸ் பியூட்டி 7.0 பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் காணப்படும் தனித்தன்மையுள்ள பேஸ் அக்சிஸ் அம்சம் என்ற முகத்தை கண்டறியும் ஒரு அம்சத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை பயனர் முகத்தை கொண்டுதிறக்கலாம்.

பின்புற கேமராவை பொறுத்த வரை, தனித்தன்மையுள்ள அளவுடன் கூடிய எப்/2 உடன் கூடிய 16எம்பி சென்ஸர் கேமராவை கொண்டுள்ளது. மேலும் பிடிஏஎப் மற்றும் போர்ட்ரைட் மோடு ஆகியவற்றையும் பின்புற கேமராவில் காண முடிகிறது.

லைட்களை எரிந்த நிலையில் வைத்திருக்க, ஒரு தரமான 3,000எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மென்பொருள் பகுதியைப் பொறுத்த வரை, விவோ வி7 இல் ஆண்ட்ராய்டு 7.1 நெவ்கட் அடிப்படையில் அமைந்த இந்நிறுவனத்தின் சொந்தமான ஃபன்டச் ஓஎஸ் 3.2 முன் நிறுவப்பட்ட நிலையில் அளிக்கப்படுகிறது.

இணைப்பு பகுதியைப் பொறுத்த வரை, விவோ வி7-ல் வைஃபை, ப்ளூடூத் 4.2, எஃப்எம் ரேடியோ, கிளோனஸ், ஜிபிஎஸ், பைடவ், ஓடிஜி மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது. மேலும் 149.3×72.8×7.9மிமி அளவில் அமைந்த இந்த ஃபோனின் எடை 139 கிராம் காணப்படுகிறது.

மேற்கூறிய எல்லாவற்றையும் தவிர, இந்த ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் ஸ்ப்லிட் 3.0 மற்றும் கோன் அப் போன்ற சில சுவாரஸ்சியமான அம்சங்களையும் பெற்று கிடைக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
One of the key highlights of the Vivo V7 is its 24MP moonlight selfie camera that comes with an aperture of f/2.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X