நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி7 பிளஸ்.!
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ப்ளூ, மேட் பிளாக் மற்றும் சாம்பெயின் தங்க நிற வகைகளில் கிடைக்கிறது விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைக்கப்பட்ட விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வலைதளங்களில் மிக எளிமையாக வாங்க முடியும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:
விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,000-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விறபனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு, 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா :
விவோ வி7பிளஸ் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. f / 2.0 துளை, 1 / 2.78-இன்ச் சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோவ் அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின் இதனுடைய ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


3225எம்ஏஎச்:
விவோ வி7பிளஸ் பொறுத்தவரை 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications