வெட்டிங் போட்டோகிராபி! இனி உங்க பாக்கெட்ல ஸ்கில்.. 2 ஸ்மார்ட்போன்கள் போதும்.. வெட்டிங் விலாக் டு போர்ட்ராய்டு!
இந்திய திருமணங்களுக்கு ஏற்ப பிரத்யேகமான போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பீச்சர்களுடன் விவோ வி60 மற்றும் விவோ வி50 ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. எந்தவொரு வெட்டிங் போட்டோகிராபி ஸ்கில்களும் இல்லாமலேயே திருமண ஜோடிகள் வியக்கும்படியான போர்ட்ராய்டுகளை இந்த மாடல்கள் கொடுக்கின்றன. வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Wedding Portrait Studio) தொடங்கி வெட்டிங் விலாக் (Wedding vLog) வரையில் பீச்சர்கள் வந்துவிட்டன. இந்த பீச்சர்கள் விவோ வி சீரிஸ் மாடல்களில் மட்டுமே கிடைக்கின்றன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ வி60 வெட்டிங் பீச்சர்கள் (Vivo V60 Wedding Features): இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களை கவரும் வகையில் இந்த மாடல் வெளியாகி இருக்கிறது. ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு மூலம் ஆட்டோமேட்டிக் போகல் லென்த் கொடுத்து சினிமாடிக் க்ளோஸ்அப் அவுட்புட் முதல் வெட்டிங் விலாக் வீடியோவில் மியூசிக், எடிட்களை சேர்ப்பது வரையில் பீச்சர்களை கொடுக்கிறது.

* வெட்டிங் விலாக் (Wedding vLog)
* வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டூடியோ (Wedding Portrait Studio)
* ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait)
* ஏஐ ஆரா லைட் போர்ட்ராய்டு 2.0 (AI Aura Light Portrait 2.0)
* ஃபிலிம் கேமரா மோட் (Film Camera Mode)
வெட்டிங் விலாக்: வெட்டிங் வீடியோக்களை டீசர் போல சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு கட் செய்து சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யும்படி இந்த பீச்சர் இருக்கிறது. இதற்கு எடிட்டிங் செய்ய வேண்டியது கிடையாது. ஒரே டேப் போதும். ஆனால், மியூசிக், எபெக்ட்ஸ் மற்றும் டெக்ஸ்ட்களை அதுவே கொடுக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் மட்டுமே போதும்.

வெட்டிங் போர்ட்ராய்டு ஸ்டூடியோ: திருமணத்தில் போட்டோக்களை எடுத்துவிட்டு, அதில் கலர், ஸ்டைல் போன்றவற்றை எடிட் செய்து கொண்டுவர வேண்டி இருக்கும். ஆனால், இதில் வெட்டிங் ஸ்டைல் (Wedding Style) மோட்கள் இருக்கின்றன. ப்ரொசெக்கோ (Prosecco), நியோ ரெட்ரோ (Neo Retro), பாஸ்டல் (Pastel) போன்ற மோட்கள் பிரீமியம் போர்ட்ராய்டுகளை கொடுக்கின்றன.
ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு: க்ளோஸ்அப் போர்ட்ராய்டு, லேண்ட்ஸ்கேப் போர்ட்ராய்டு, ஸ்ட்ரீட் போர்ட்ராய்டு போன்றவற்றுக்கு ஆட்டோ போகல் லென்த் (Focal Length) கொண்ட பீச்சர்கள் இதில் கிடைக்கின்றன. 23 எம்எம், 35 எம்எம், 100 எம்எம் என்று மல்டிபிள் போகல் லென்த்களை இது கொடுக்கிறது. இந்த லென்த்களுக்கு போக்கெ ஸ்டைல்களையும் (Bokeh Style) கொடுக்கிறது.

* ஜீஸ் சோனார் ஸ்டைல் பொக்கெ (ZEISS Sonnar Style Bokeh) - 85எம்எம்
* ஜீஸ் பயோடர் ஸ்டைல் பொக்கெ (ZEISS Biotar Style Bokeh) - 50எம்எம்
* ஜீஸ் பி-ஸ்பீடு ஸ்டைல் பொக்கெ (ZEISS B-Speed Style Bokeh) - 35எம்எம்
* ஜீஸ் டிஸ்டேகன் ஸ்டைல் பொக்கெ (ZEISS Distagon Style Bokeh) - 23 எம்எம்
* ஜீஸ் பிளார் ஸ்டைல் பொக்கெ (ZEISS Planar Style Bokeh) - 100 எம்எம்
ஏஐ ஆரா லைட் போர்ட்ராய்டு 2.0: திருமணங்களில் பெரும்பான முக்கிய நிகழ்வுகள் இரவு நேரங்களில் நடக்கும். இதற்கு ஏற்ப அவுட்புட் கொடுக்க ஏஐ என்ஹான்ஸ் செய்யப்பட்ட ஆரா லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நைட் போட்டோகிராபிகளுக்கு ஏற்ப 3டி லைட் ஃபில் (3D Light Fill)கொடுக்கும். இதை ஸ்டூயோ லைன்டிங் என்று விவோ நிறுவனம் சொல்கிறது.

ஃபிலிம் கேமரா மோட்: திருமணங்களின் போது போட்டோகிராபி ஸ்கில் இல்லாமல், ஃபிரேம்களை பெறுவதற்கு இந்த பீச்சர் கிடைக்கிறது. இதில் வெட்டிங் ஃபிரேம்களை (Wedding Frames) இதில் பெற்று கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி பெஸ்ட் அவுட்புட்டை எடுத்து கொள்ளலாம். இப்படி வெட்டிங் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பீச்சர்களை இந்த விவோ வி60 கொடுக்கிறது.
விவோ வி50 வெட்டிங் பீச்சர்கள் (Vivo V50 Wedding Features): விவோ வி60 ஸ்மார்ட்போனில் கிடைத்த வெட்டிங் விலாக் பீச்சரை தவர மற்ற எல்லா பீச்சர்களும் இந்த வி50 போனிலும் கிடைக்கிறது. விவோ வி60 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா (ஜீஸ் ஆப்டிக்ஸ், ஓஐஎஸ், சோனி ஐஎம்எக்ஸ்766 சென்சார்) + ஐஎம்எக்ஸ்882 சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ உள்ளது.

8 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி செல்பீ உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.36,999ஆக இருக்கிறது. விவோ வி50 மாடலின் ஆரம்ப விலை ரூ.34,999ஆக இருக்கிறது. இதில் 50 எம்பி மெயின் கேமரா (ஜீஸ் ஆப்டிக்ஸ், ஓஐஎஸ், ஓம்னிவிஷன் சென்சார்) + 50 எம்பி அல்ட்ரா வைடி கேமரா (சாம்சங் ஜேஎன்1 சென்சார்) உள்ளது. சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா வருகிறது.


Click it and Unblock the Notifications








