அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வரும் புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ (vivo) நிறுவனம் தனது புதிய விவோ வி50இ (Vivo V50e) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவோ ஸ்மார்ட்போன் BIS சான்றிதழைப் பெற்றிருந்தது. சபையர் ப்ளூ (Sapphire Blue), பேர்ல் ஒயிட் (Pearl White), நிறங்களில் இந்த போன் வெளியாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ வி50இ அம்சங்கள் (Vivo V50e Specifications): 6.77-இன்ச் 1.5கே குவாட் கர்வ்ட் அமோலெட்(quad-curved AMOLED) டிஸ்பிளே வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) சிப்செட் வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Funtouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி ஐஎம்எகஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் விவோ வி50இ போன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
5600mAh பேட்டரி வசதியுடன் விவோ வி50இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்து குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ வி50இ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய விவோ போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: gizmochina


Click it and Unblock the Notifications








