Home
News

விவோ V5 மாடலின் விலையை ரூ.3000 திடீரென குறைத்த பிளிப்கார்ட்

செல்பி புகைப்பட ஸ்பெஷிலிஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன விவோ V5 மாடல் பிளிப்கார்டில் தற்போது ரூ.22,990 விலைக்கு விற்கப்படுகிறது.

By Siva

செல்பி புகைப்பட ஸ்பெஷிலிஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன விவோ V5 மாடல் பிளிப்கார்டில் தற்போது ரூ.22,990 விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகமானபோது ரூ.27,990 என்று இருந்த இந்த மாடலின் விலை அப்போதே பிளிப்கார்டில் ரூ.25,990 என்ற விலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ரூ.3000 விலையை பிளிப்கார்ட் குறைத்துள்ளது.

விவோ V5 மாடலின் விலையை ரூ.3000 திடீரென குறைத்த பிளிப்கார்ட்

விவோ V5 மாடல் ஸ்மார்ட்போன் செல்பி கேமை அறிமுகம் செய்த மாடல்களில் ஒன்று ஆகும். டூயல் செல்பி கேமிராவை கொண்ட இந்த போனில் யூஎஸ்பி அமைந்துள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு

இரண்டு செல்பி கேமிராக்களில் ஒன்று 20MP பிரைமரி கேமிராவாகவும், இன்னொன்று 8MP செல்பி செகண்டரி கேமிராவாகவும் இந்த மாடலில் உள்ளது. மேலும் போக் எபெக்ட்ஸில் செல்பி எடுக்கும் வகையில் அமைந்து முதல் ஆண்ட்ராய்டு போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமிராவில் சோனி IMX676 இமேஜ் சென்சார் பயன்படுத்தப்படுகிறது என்பதன் சிறப்பு ஆகும்

இந்த போனின் மற்ற சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கும்போது, இது 5.5 இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளதோடு 1080P ரெசலூசனையும் கொண்டுள்ளது. மேலும் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த விவோ V5 மாடல் ஸ்மார்ட்போன் கோர்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அமைந்துள்ளது. இது கொரில்லா கிளாஸ் 4ஐ விட அதிக பாதுகாப்பு அம்சம் கொண்டது என்பது குறிப்ப்டடத்டஹ்க்கது.

மேலும் இந்த விவோ V5 மாடல் ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625 சிபியூ வை கொண்டது. இதன் ஆக்டோகோர் சிப் மற்றும் 14nm பிராஸசர் தினசரி பயன்பாட்டுக்கு முக்கிய உதவியாக இருக்கும். மேலும் இந்த மாடலில் 4GB ரேம் இருப்பதால் வேகமாக இயங்கும் ஸ்மார்ட்போனாக உள்ளது.

இந்த விவோ V5 மாடல் ஸ்மார்ட்போன் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மெமரியை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி இதில் இல்லை

பிளிப்கார்ட் நிறுவனம், இந்த இந்த விவோ V5 மாடல் ஸ்மார்ட்போனை வாங்க எந்தவித முன்பணம் பெறுவதில்லை. மாதத்தவணையாக ரூ.1916 மட்டுமே செலுத்தும் வகையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்த போனை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். மேலும் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்துவிட்டு இந்த விவோ V5 மாடல் ஸ்மார்ட்போனை பெற்றால் உங்களுக்கு ரூ.15600 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது

Best Mobiles in India

English summary
Launched at a price of Rs. 27,990, Vivo V5 Plus introduces the first of its kind dual-selfie camera on a smartphone that captures amazing selfies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X