செல்பீ ஸ்பெஷல் : விவோ வி5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
விவோ நிறுவனம் இந்த வெளியீட்டை புது தில்லியில் இன்று நிகழ்ந்த ஒரு வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ நிறுவனம் திங்களன்று (இன்று) இந்தியாவில், செல்பீகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதன் வி5 ப்ளஸ் ஸ்மார்ட்போனை துவங்குகிறது. விவோ நிறுவனம் இந்த வெளியீட்டை புது தில்லியில் இன்று நிகழ்ந்த ஒரு வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
நினைவுகூர வேண்டுமெனில், இந்த ஸ்மார்ட்போன் கடந்த வாரம் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் விவோ வி5 ப்ளஸ் கருவி ரூ.27,980/- என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இக்கருவியின் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

டூவல் செல்பீ கேமரா
விவோ வி5 ப்ளஸ் கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் புதிய அனைத்து உலோக உடல் மற்றும் வி5 கருவியோடு ஒப்பிடும்போது நல்ல செல்பீகளுக்காக டூவல் செல்பீ கேமரா தொகுதி கொண்டுள்ளது.

2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்
ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே
இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் அது லெனோவா பி2 கருவிக்கு பிறகு ஒரு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் இரண்டாவது கருவியாக இது திகழ்கிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம், ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் இரட்டை முன்பக்க கேமரா ஆகியவைகளும் இக்கருவியை அடக்கம்.

கேமிரா
முன்னதாக விவோ வி5 சாதனம் ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பு கொண்டுருந்தது. அது எப் / 2.0 துளை மற்றும் 5பி லென்ஸ் அமைப்பு கொண்ட சோனி ஐஏஎக்ஸ்376 கொண்ட ஒரு 20எம்பி சென்சார் மற்றும் 1 / 2.78 அங்குல சென்சார் கொண்ட ஒரு 8எம்பி கேமிராவாக திகழ்கிறது. இதிலிருந்து 'பொக்கே' விளைவுபெற்று விவோ வி5 பிளஸ் கருவியில் ஒப்பீட்டளவில் இதே போன்ற கேமிரா அமைப்பு இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி, சேமிப்பு
மற்ற அம்சங்கள்ளை பொருத்தமட்டில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 128ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவு, வேகமான சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3160எம்ஏஎச் பேட்டரி, 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு வசதிகள் உடன் ஹோம் பட்டனில் கைரேகை ரீடர் ஆகியவைகளும் இக்கருவியில் அடக்கம். இந்த விவோ ஸ்மார்ட்போன் உடன் விவோ வி5 லைட் கருவியும் இணைந்தே வெளியிடப்பட்டுள்ளது 3என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் - இந்தியாவில் அறிமுகம்.!


Click it and Unblock the Notifications