மீடியாடெக் 7000 சீரிஸ் பிராசஸருடன் வரும் முதல் Vivo போன் எது தெரியுமா?
விவோ (Vivo) ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சீரிஸ் எஸ்ஓசி (MediaTek Dimensity 7000 Series SoC) பிராசஸருடன் விவோ வி29இ 5ஜி (Vivo V29e 5G) போனை களமிறக்க உள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் கசித்துள்ளன. இந்த போன் பிராசஸரில் மட்டுமல்லாமல் மற்ற அம்சங்களிலும் அட்டகாசமாக இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
மீடியாடெக் நிறுவனத்தின் டைமன்சிட்டி 7000 சீரிஸ் 5ஜி (5G) பிராசஸர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த டைமன்சிட்டி 7000 சீரிஸ் பிராசஸர் கேமிங் பர்பாமன்ஸ் (Gaming Performance), பேட்டரி டியூரபிலிடி (Battery Durability), டிஸ்பிளே என்ஹான்ஸ்மென்ட் (Display Enhancement) உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதால், அண்மை காலமாக வெளிவரும் மிட்-ரேன்ஞ் (Mid-Range) ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

இப்போது விவோ நிறுவனமும் மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சீரிஸ் பிராசஸரை பயன்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பிராசஸர் விவோ V29e போனில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்துவந்தது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவோ வி29இ போனின் அம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துவிட்டன. சிறந்த கேமரா, பிராசஸர், பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கி விரும்புவோருக்கு விவோ V29e நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த போனின் கசிந்த தகவல்களை காண்போம்.
விவோ V29e போனின் அம்சங்கள்: இந்த விவோ போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7000 சீரிஸின் முதல் பிராசஸரான டைமன்சிட்டி 7200 (Dimensity 7200 processor) உடன் வருகிறது. ஆண்டிராய்டு 13 (Android 13) வெர்ஷனில் களமிறங்குகிறது. 6.62 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே (2,400 × 1,080 பிக்சல்கள்) மல்டி-டச் (multi - touch) சப்போர்ட் உடன் வருகிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 4600mAh பேட்டரி 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதி உடன் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா 2 எம்பி டூயல் சென்சார்கள் (பொக்கே (bokeh) - மேக்ரோ (macro)) உடன் வருகிறது. செல்பீ கேமரா 32 எம்பியாக உள்ளது. இந்த போன் கோல்டு (Gold), ப்ளூ (Blue), பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் வெளியாக உள்ளது.
இந்த போனின் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இது மிட்-ரேன்ஞ் விலையில் வெளியாக உள்ளதால், ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று கசிந்த தகவல்கள் மூலம் தெரியவருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








