சுண்டிவிட்டா ரத்தம் வரும்.. பிளட் கலரு.. மான்ஸ்டர் பவரு.. விரைவில் வெளியாகும் Vivo V29e..
பெஸ்டான கேமரா ஸ்மார்ட்போன் (Best camera smartphone) என்று சொன்னாலே அது விவோ (Vivo) நிறுவனத்தின் சிறந்த மாடல்களை தான் குறிக்கும். விவோ நிறுவனம் விரைவில் புதிதாக விவோ வி29இ (Vivo V29e) என்ற மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
Vivo V29e விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் டீஸ் செய்யப்பட்டுள்ளது. புதிய Vivo V தொடர் ஸ்மார்ட்போனின் வருகையை நிறுவனம் உறுதிப்படுத்த, அதன் புதிய டீஸரை, சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் நிறுவனம் அதன் இந்திய இணையதளத்தில் பிரத்தியேக மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது.

டீசரில், நிறுவனம் ஸ்மார்ட்போனின் மெலிதான வடிவமைப்பை விளம்பரப்படுத்துகிறது. அதில், இந்த விவோ வி29e ஸ்மார்ட்போன் ஆனது ஒரு வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்று தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த டீஸர் புகைப்படத்தில் நிறுவனம், அதன் விவோ வி29e சாதனத்தை ரெட் நிறத்தில் காண்பித்துள்ளது. இது பார்ப்பதற்கு பிளட் ரெட் போல காட்சியளிக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பிற்கும் இதன் நிறத்திற்கும் அதன் லுக் அல்டிமேட் ஆக இருக்கிறது. இந்தியாவில் Vivo V29e விலை மற்றும் ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது 64 மெகாபிக்சல் பரிமாறிய ரியர் கேமராவைக் கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. Vivo V29e ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 (Qualcomm Snapdragon 400) வரிசை சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விவோ தனது இணையதளத்தில் பிரத்தியேக மைக்ரோசைட் மூலம் இந்தியாவில் புதிய Vivo V29e இன் வருகையை டீஸ் செய்து, அதன் ரசிகர்களுக்கு ஒரு உறுதிப்பாட்டை வழங்கியுள்ளது. வரவிருக்கும் சாதனம் ஆனது வண்ணமயமான மற்றும் மெலிதான கட்டமைப்பைக் கொண்ட வடிவமைப்பு தலைசிறந்த படைப்பாக இருக்கும் என்று நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது.
மைக்ரோசைட்டில் Vivo V29e இன் ஒரு படம் உள்ளது. இது ஸ்மார்ட்போனின் பின்புறத்திலிருந்து காட்டுகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 2 அல்ல 3 பின்புற கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது. இது ஒரு வளைந்த டிஸ்பிளேவைக் காட்டியுள்ளது. இருப்பினும், ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் வெளியான அறிக்கை Vivo V29e இன் இந்திய விலை மற்றும் விவரக்குறிப்புகளை பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் விலை சுமார் ரூ. 30,000 இருக்கும் என்று கூறப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என்று கூறப்படுகிறது.
Vivo V29e ஆனது OIS உடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவால் வழிநடத்தப்படும். இரட்டை பின்புற கேமரா கொண்டதாக கூறப்படுகிறது. ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50 மெகாபிக்சல் முன் கேமரா மூலம் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளை நிர்வகிக்க முடியும். பின்புற கேமரா போர்ட்ரைட் அம்சத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளது.
கடந்த கசிவின்படி, Vivo V29e ஆனது Android 13 அடிப்படையிலான FunTouchOS 13 இல் இயங்கும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்திற்கு ஆதரவுடன் 3D வளைந்த கர்வுடு கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 480+ 5G சிப்செட் மூலம் இயக்கலாம். இது 80W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,600mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். புது போன் வாங்க விரும்புவர்கள் கொஞ்சம் வெயிட் செய்து, இந்த போனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








