Home
News

பேரு தான் லைட் மாடல் மொபைல்.. ஆனா Vivo V29 Lite 5G போன்ல எல்லாமே சூப்பர் அம்சம்!

விவோ (Vivo) நிறுவனம் அடுத்தபடியாக, அதன் மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் பிரிவில் புதிதாக விவோ வி29 லைட் 5ஜி (Vivo V29 Lite 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது அறிமுகமாகியுள்ளது.

ரிபப்ளிக் செக் குடியரசில் அதிகாரப்பூர்வமாக இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீபத்தில் அறிமுகமான Vivo Y78 5G குளோபல் மாடல் போன்ற வன்பொருளை இந்த ஸ்மார்ட்போன் பகிர்ந்து கொள்கிறது செல்ஃபி ஸ்னாப்பருக்கான மையத்தில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட், டிரிபிள் கேமரா சென்சார்களை வைக்க இரட்டை வட்ட வளையங்கள் உள்ளது.

பேரு தான் லைட் மாடல் மொபைல்.. ஆனா Vivo V29 Lite 5G போன்ல எல்லாமே..

பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் வளைந்த விளிம்புகள் உள்ளன. Vivo V29 Lite ஆனது Snapdragon 695 சிப்செட் உடன் வருகிறது. 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. Android 13 OS மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், Vivo V29 Lite 5G சாதனம் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடலின் விலை CZK 8,499 ஆகும்.

இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 31,900 விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் டார்க் பிளாக் மற்றும் சம்மர் கோல்ட் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த போன் ஏற்கனவே முன் விற்பனைக்கு தயாராக உள்ளது மற்றும் ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. விவோ வி29 லைட் 5G ஆனது 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.78' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன்.

300Hz டச் சாம்பிள் வீதம், 2160Hz PWM கண் பாதுகாப்பு, 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 1300 நிட்ஸ் 1 செண்ட்ஸ் 2 பிரகாசம் நிலைப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட். இந்த சாதனம் Adreno GPU உடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 695 சிப்செட் உடன் வருகிறது. விவோ வி29 லைட் 5ஜி சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 13 உடன் Android 13 OS இல் இயங்குகிறது.

Vivo V29 Lite 5G ஆனது 64MP ப்ரைமரி கேமரா சென்சார், 2MP டெப்த் யூனிட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில் 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS, USB Type-C மற்றும் NFC ஆகியவை அடங்கும். Vivo V29 Lite 5G ஆனது 44W ஃபாஸ்ட்-வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் லைட் வெர்ஷன் மாடல் என்ற பெயருடன் வந்தாலும், இந்த சாதனத்தின் அம்சங்கள் மிட் ரேஞ்சில் பெஸ்டான அம்சங்களை பேக் செய்துள்ளது. உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பிடிக்க என்ன காரணம் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 Lite 5G launched with Snapdragon 695 know the price and specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X