Home
News

இனி Vivo V29 மற்றும் Vivo V29 Pro போன் தான் இந்தியால கிங்.. கம்மி விலையில் அல்டிமேட் அம்சங்கள்..

விவோ (Vivo) நிறுவனம் ஒருவழியாக விவோ வி 29 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்துவிட்டது. இதன் கீழ், விவோ வி29 (Vivo V29) மற்றும் விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) ஆகிய இரண்டு மாடல்களை நிறுவன வெளியிட்டுள்ளது.

இதன் விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். விவோ வி29 மூன்று வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது ஹிமாலயன் ப்ளூ (Himalayan Blue), மெஜஸ்டிக் ரெட் (Majestic Red) மற்றும் ஸ்பேஸ் பிளாக் (Space Black) நிறங்களில் வருகிறது. மறுபுறம், விவோ வி29 ப்ரோ, ஹிமாலயன் ப்ளூ () மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இரண்டு வண்ண விருப்பங்களை மட்டுமே கொண்டுள்ளது.

இனி Vivo V29 மற்றும் Vivo V29 Pro போன் தான் இந்தியால கிங்.. கம்மி விலை

இந்த 2 போன்களும் 6.78' இன்ச் அமோலேட் (AMOLED) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. விவோ வி29 இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. இது 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி உடன் வருகிறது. இதன் 128ஜிபி மாடல் விலை ரூ. 32,999 மற்றும் 256ஜேபி மாடல் விலை ரூ. 36,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி29 ப்ரோ மாடல் 8ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 512 ஜிபி மாடல் இல்லை. 8ஜிபி ரேம் விலை ரூ.39,999 ஆகும். 12ஜிபி ரேம் மாடல் விலை ரூ.42,999 விலைக்கு கிடைக்கும். இந்த 2 போன்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று முதல் தொடங்குகின்றன. Vivo V29 Pro அக்டோபர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.

விவோ வி29 அக்டோபர் 17 முதல் கிடைக்கும். இந்த போன்கள் Vivo இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) இல் ஆன்லைனில் கிடைக்கும். பிரத்யேக விவோ ஸ்டோர்களிலும், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ் மற்றும் பஜாஜ் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பிற சில்லறை கடைகளிலும் கிடைக்கும்.

Vivo V29 மற்றும் V29 Pro இரண்டும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடன் வருகின்றன. இந்த சாதனம் வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளன. இவை பிரீமியம் தோற்றத்தைக் கொடுக்கிறது. பின்புறத்தில், மூன்று கேமரா லென்ஸ்கள், எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஸ்மார்ட் ஆரா லைட் ஆகியவற்றைக் கொண்ட கேமரா தொகுதி உள்ளது.

இனி Vivo V29 மற்றும் Vivo V29 Pro போன் தான் இந்தியால கிங்.. கம்மி விலை

விவோ வி29 ப்ரோ ஹிமாலயன் ப்ளூ வண்ணம் ஒரு தனித்துவமான 3டி பார்டிக்கில் வடிவமைப்புடன் வருகிறது. இது பின் பேனலில் ஃபிலோட்டிங் மலை அமைப்பை உருவாக்குகிறது. மறுபுறம், V29, வண்ணத்தை மாற்றும் பின் பேனலைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 6.78' இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் HDR 10+ சப்போர்ட் உடன் கொண்டுள்ளது.

இதன் பீக் பிரைட்னஸ் 1300 nits உடன் 452 PPI பிக்சல் அடர்த்தியை கொண்டுள்ளது. இரண்டு போன்களின் கீழ் விளிம்பிலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், சிம் ட்ரே மற்றும் ஸ்பீக்கர்களின் தொகுப்பு உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி (Qualcomm Snapdragon 778G) சிப்செட்டில் இயங்குகிறது. விவோ வி29 ப்ரோ ஆனது மீடியாடெக் டிமென்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவைப் பற்றி பேசுகையில், இரண்டு போன்களும் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. V29 ஆனது 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே லென்ஸுடன் OIS உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. V29 Pro ஆனது OIS உடன் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12-மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இரண்டு போன்களிலும் 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, இரண்டு போன்களும் 80W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4600 mAh (TYP) பேட்டரியைக் கொண்டுள்ளன. விவோ சார்ஜிங் செய்யும் போது, ​​​​ஃபோன் 0 முதல் 50 வரை சார்ஜை வெறும் 18 நிமிடங்களில் அடையும் என்று கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 and Vivo V29 Pro The Masterpiece Mobile From Vivo Launched In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X