Vivo-வின் புது கலர் சேஞ்சிங் Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.! விலை என்ன?

|

குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் பிராண்டான சியோமிக்கு அடுத்தபடியாக Vivo நிறுவனம் திகழ்கிறது. உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான Vivo இப்போது, இந்தியாவில் அதன் பிரபலமான V சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக Vivo V25 Pro 5G என்ற ஸ்மார்ட்போன் மாடலை நாளை அறிமுகம் செய்யவிருக்கிறது.

விவோ வி25 ப்ரோ 5ஜி இந்தியாவில் நாளை அறிமுகமா?

விவோ வி25 ப்ரோ 5ஜி இந்தியாவில் நாளை அறிமுகமா?

விவோ வி25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியான விபரங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். ஆகஸ்ட் 17 (நாளை) மதியம் 12 மணிக்கு, ஆன்லைன் நிகழ்வின் மூலம் விவோ நிறுவனம் இந்த டிவைஸை அறிமுகம் செய்யவுள்ளது. வரவிருக்கும் விவோ போன் இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும் என்பதை பிராண்ட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கலர் சேஞ்சிங் தொழில்நுட்பத்துடன் புது Vivo V25 Pro

கலர் சேஞ்சிங் தொழில்நுட்பத்துடன் புது Vivo V25 Pro

Vivo V25 Pro ஸ்மார்ட்போன் பின்புற பேனலில் நிறத்தை மாற்றும் Fluorite AG கிளாஸுடன் வரும் என்று நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. Vivo அதன் V23 Pro ஸ்மார்ட்போனில் பயன்படுத்திய அதே கலர் சேஞ்சிங் தொழில்நுட்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, Vivo, V25 Pro இன் மைக்ரோசைட் வழியாக, இந்த புதிய ஸ்மார்ட்போன் 3D டிசைன் மற்றும் ரவுண்டட் எட்ஜ்களுடன் வருகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!

Vivo V25 Pro ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

Vivo V25 Pro ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

Vivo V25 Pro ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதன் முன்னோடி விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.40,000 ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு ஊகம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விவோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விவோ நிறுவனம் அதன் வரவிருக்கும் Vivo V25 Pro ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சங்கள்

Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சங்கள்

Vivo V25 Pro ஆனது பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது Vivo V23 Pro இல் உள்ளதை விடச் சற்று வித்தியாசமானது. Vivo V23 Pro போலல்லாமல், Vivo V25 Pro ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அமைப்பு வித்தியாசமான வடிவமைப்புடன் வருகிறது. இது தவிர, Vivo V25 Pro ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபலைசேஷன் (OIS) மற்றும் ஹைப்ரிட் இமேஜ் ஸ்டேபலைசேஷன் திறன்கள் கொண்டதாக இருக்கிறது. இது சூப்பர் நைட் போர்ட்ரெய்ட் மோட் உடன் வருகிறது.

OIS உடன் 64MP பிரைமரி கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்

OIS உடன் 64MP பிரைமரி கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்

இரவில் OIS உடன் வீடியோக்களை ரெக்கார்டிங் செய்யும் திறன் கொண்ட 64MP பிரைமரி கேமராவை பின்புறத்தில் கொண்டிருக்கும் என்றும் Vivo வெளிப்படுத்தியுள்ளது. Vivo நிறுவனத்தின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 சிப்செட் மூலம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி எக்ஸ்பெண்டபிள் ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் 4,830mAh கொண்ட 66W பாஸ்ட் சார்ஜிங் பேட்டரி மூலம் இயக்கப்படும்.

அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

சமீபத்தில் விலை குறைந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இது தானா?

சமீபத்தில் விலை குறைந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இது தானா?

சமீபத்தில், Vivo V23e, Vivo Y21T ஆகிய மாடல்களின் விலையை குறைத்துள்ளது. Vivo V23e (5G) மற்றும் Y21T இப்போது முறையே ரூ.24,999 மற்றும் ரூ.15,499 என்ற புதிய விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், vivo இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் புதிய விலையில் இனி வாடிக்கையாளர்கள் வாங்கலாம். V23e ஒற்றை 8GB + 128GB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. Y21T ஸ்மார்ட்போன் 4GB + 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V25 Pro set to launch in India on August 17

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X