Vivo V25 Pro மாடலை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் பேன்ஸ்! ஏன் தெரியுமா? விஷயம் இருக்கு பாஸ்!
ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்டது, இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தயார்நிலையில் உள்ளன. இதில் இந்திய மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலும், இந்த மாதத்தில் அறிமுகமாகவிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இப்போது Vivo நிறுவனத்தின் புதிய vivo V25 Pro ஸ்மார்ட்போன் மீது இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய சுவாரசியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

Vivo அறிமுகம் செய்யும் புதிய Vivo V25 மற்றும் Vivo V25 Pro
Vivo நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் vivo V25 தொடர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. விவோ நிறுவனம் உண்மையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் வேலைகளை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரிசையில் விவோ வி25 (Vivo V25) மற்றும் விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த இரண்டு சாதனங்களும் ஒன்றாக ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஏன் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போனுக்காக காத்திருக்கின்றனர்?
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை ஏன் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று தெரியுமா? காரணம், சிறிது காலத்திற்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, விவோ வி25 ப்ரோவை வைத்திருந்ததைக் காண முடிந்தது. இதனால், ஒரு புதிய ஹைப் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உருவானது. இதனால், இந்த சந்தானத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது, இந்த புதிய விவோ வி25 ப்ரோ சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் அதன் சாத்தியமான விலைக் குறிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்
சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, வரவிருக்கும் vivo V25 Pro ஸ்மார்ட்போன் மாடலில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமராவுடன் வரப்போகிறது. இதில் 64MP பிரைமரி கேமரா OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) ஆதரவுடன் வருகிறது. இது மிகவும் நிலையான பிக்ச்சர் மற்றும் வீடியோ கேப்ச்சர் ஆதரவை வழங்குகிறது. இந்த சாதனம் சூப்பர் நைட் மோடு அம்சத்தையும் ஆதரிக்கும்.

விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்
கூடுதலாக, இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவில் வரும் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட் கேமரா உடன் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) அம்சத்துடன் வருகிறது. அதேபோல், வரவிருக்கும் இந்த புதிய Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், Eye AutoFocus உடன் இயங்கும் 32 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டரை விவோ வழங்கியுள்ளது. சார்ஜிங் வேகத்தைப் பொறுத்தவரை, வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

சூரிய ஒளியில் Vivo V25 Pro சாதனம் கலர் மாறுமா?
இது அதன் முன்னோடியாக வழங்கப்பட்ட 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது என்று விவோ தெரிவித்துள்ளது. இந்த புதிய Vivo V25 Pro சாதனத்தின் வடிவமைப்பிற்கு வரும்போது, இந்த ஸ்மார்ட்போன் மாடலானது Fluorite AG கிளாஸ் உடன் நிறத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Vivo V25 Pro சாதனம் சூரிய ஒளி அல்லது புற ஊதா கதிர்வீச்சுக்கு வெளிப்படும் போதெல்லாம், அது நிறத்தை மாற்றும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே விபரம்
இந்த புதிய Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பற்றிப் பேசுகையில், வரவிருக்கும் மிரட்டலான ஸ்மார்ட்போன் டிவைஸ் 120Hz ரெப்ரெஷிங் ரேட் உடன் கூடிய FHD+ 3D AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் ஹூட்டின் கீழ், MediaTek Dimensity 1300 சிப்செட் உடன் வெளிவரும் என்று சமீபத்திய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 8GB ரேம் மற்றும் 12GB ரேம் உடன் 128GB மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?
இந்த புதிய Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக இந்திய மக்கள் காத்திருக்கின்றனர். இதன் அறிமுகம் இந்த மாதம் நிகழவுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிப் பேசுகையில், நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ விலைப் புள்ளி விபரங்களை இன்னும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், நமக்குக் கிடைத்த தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் இந்தியச் சந்தையில் சுமார் ரூ. 40,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியளவு சலுகை எதிர்பார்க்கப்படுகிறதா?
இந்த விலை Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் பேசிக் வேரியண்ட் மாடலுக்குரியது என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாதத்தில் இன்னும் சில நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாக இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பண்டிகை காலம் நெருங்குவதைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது பெரியளவு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications