50MP செல்பி கேமரா உடன் Vivo V25 5G:அறிமுக தேதி அறிவித்து அதிர வைத்த Vivo

|

Vivo V25 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் Vivo V25 5G ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் ஆதரவுடன்4,500mAh பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். Vivo V25 ப்ரோ மற்றும் Vivo V25 5Gக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

அதிகாரப்பூர்வமாக அறிவித்த Vivo

அதிகாரப்பூர்வமாக அறிவித்த Vivo

Vivo V25 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதன் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 900 5G SoC உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போனானது 44W சார்ஜிங் ஆதரவுடன் 4500 பேட்டரி கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MediaTek Dimensity 1300 SoC சிப்செட் ஆதரவு

MediaTek Dimensity 1300 SoC சிப்செட் ஆதரவு

Vivo V25 Pro ஸ்மார்ட்போனானது சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 12GB வரையிலான ரேம் ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 12 மூலம் இயக்கப்படுகிறது.

Vivo V25 5G விலை

Vivo V25 5G விலை

ஆகஸ்ட் 25 ஆம் தேதி Vivo, தாய்லாந்தில் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் நிறுவனம் Vivo V25 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நோ-விஷன் முன்பதிவு அதாவது ஸ்மார்ட்போன் வடிவமைப்பு தெரியாத முன்பதிவுக்கு Vivo V25 5G பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 25 வரை ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம்.

Vivo V25 5G ஸ்மார்ட்போனை இப்போதே முன்பதிவு செய்யலாம்

Vivo V25 5G ஸ்மார்ட்போனை இப்போதே முன்பதிவு செய்யலாம்

Vivo V25 5G ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் 500 THB செலுத்தி முன்பதிவு செய்யலாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்யும் பயனர்கள் E-VIP சலுகையை பெறுவார்கள். இதன்மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போனுக்கான 2 வருட வாரண்டியையும், 1 வருடி டிஸ்ப்ளே காப்பீட்டு நன்மையையும் பெறுவார்கள்.

Vivo V25 5G சிறப்பம்சங்கள்

Vivo V25 5G சிறப்பம்சங்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட Vivo V25 Pro மற்றும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கும் Vivo V25 5G ஸ்மார்ட்போனுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா?. Vivo V25 5G ஸ்மார்ட்போனானது Vivo V25 Pro இன் வெண்ணிலா பதிப்பாகும். விவோ வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் உறுதி செய்யப்பட்டது.

MediaTek Dimensity 900 5G SoC ஆதரவு

Vivo V25 5G ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 900 5G SoC மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவோடு வெளியாக இருக்கிறது.

44W சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி

Vivo V25 5G ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 50 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

Vivo V25 5G ஸ்மார்ட்போனானது 44W சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V25 5G Set to Launch on August 25: Specs Revealed by Vivo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X