விரைவில் களமிறங்கும் Vivo V25 5G.! இந்த போனை யோசிக்காம வாங்கலாம்.!

|

விவோ புதிய V-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. Vivo நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வி-சீரிஸில் விவோ வி25 ப்ரோ மாடலை அதன் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தியது. வெண்ணிலா வேரியண்ட் V25 5G தாய்லாந்தில் வெளியிடப்பட்டது. Vivo V25 Pro 5G இந்தியாவில் வாங்குவதற்குக் கிடைக்கும் போது, ​​Vivo வெண்ணிலா மாடலை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நிறுவனம் விரைவில் இந்தியாவில் Vivo V25 5G மாடலை அறிமுகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

 Vivo V25 5G இந்தியாவில் அறிமுகமா?

Vivo V25 5G இந்தியாவில் அறிமுகமா?

இந்த புதிய வெண்ணிலா Vivo V25 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் Flipkart வழியாக வாங்குவதற்கு விரைவில் கிடைக்கும். Flipkart இல் உள்ள மைக்ரோசைட் சில முக்கிய விவரங்களை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. Vivo V25 5G இந்தியா வெளியீட்டு தேதி, சிறப்பம்ச விபரங்கள் மற்றும் இதுவரை அறியப்பட்ட பிற முக்கியமான தகவல்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் சமீபத்திய V-சீரிஸில் இரண்டாவது ஸ்மார்ட்போன் மாடலாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாகவே அறிமுகமா?

புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாகவே அறிமுகமா?

இந்த போன் இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் மைக்ரோசைட் வழியாக அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் சாதனம் பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதை பிளிப்கார்ட்டின் மைக்ரோசைட் உறுதிப்படுத்துகிறது. இது நிறத்தை மாற்றும் கலர் சேஞ்சிங் தொழில்நுட்பத்துடன் கூடிய ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் உடன் வெளிவரும் என்பதையும் மைக்ரோசைட் குறிப்பிட்டுள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

மிரட்டலான கேமரா உடன் வெளிவரும் Vivo V25 5G

மிரட்டலான கேமரா உடன் வெளிவரும் Vivo V25 5G

Flipkart மூலம் இந்தியாவில் கிடைக்கவிருக்கும் இந்த புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் டிஸ்பிளே வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட 50MP ஆட்டோ-ஃபோகஸ் செல்பி ஸ்னாப்பர் உடன் வருகிறது என்பதையும் மைக்ரோசைட் வெளிப்படுத்தியுள்ளது. பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் மோடு போன்ற ஸ்பெஷல் போட்டோ மோட்களும் இதில் உள்ளது. பின்புறத்தில் Vivo V25 5G சாதனம் 64MP பிரைமரி கேமராவுடன் டிரிபிள்-கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதில், 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமராவுடன் OIS ஆதரவும் உள்ளது.

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் விலை

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் விலை

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 8ஜிபி எக்ஸ்டெண்டட் ரேம் ஆதரவுடன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய Vivo V25 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலாகவும் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலாகவும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. Vivo V25 5G போனின் விலை பற்றிப் பார்க்கையில், இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் ரூ.30,000 என்ற விலைக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

44W பாஸ்ட் சார்ஜிங் உடன் என்ன சைஸ் பேட்டரி

44W பாஸ்ட் சார்ஜிங் உடன் என்ன சைஸ் பேட்டரி

போனின் மற்ற அம்சங்கள் பற்றி பேசுகையில், இதன் டிஸ்பிளே 90Hz ரெப்பிரெஷ் ரேட் உடன் கூடிய 6.44' இன்ச் AMOLED டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் Vivo V25 5G ஸ்மார்ட்போன் மாடல்கள் 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த MediaTek Dimensity 900 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V25 5G India Launch Confirmed Via Flipkart Expected Price and Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X