விவோ இப்படி ஒரு போனை அறிமுகம் செய்கிறதா? பட்ஜெட் விலை தானா.. ஆனா..?

|

ஸ்மார்ட் போன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முதன்மையில் இருக்கும் விவோ (Vivo) நிறுவனம் சமீபத்தில் வி25 என்ற ஸீரிசை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த ஸீரிசில் வி25 5ஜி என்ற வேரியண்டை ரூ. 27,999 மற்றும் வி25 ப்ரோ 5ஜி என்ற வேரியண்டை ரூ. 35,999-க்கும் விற்பனை செய்து வருகிறது. இவ்விரண்டையும் தொடர்ந்து இந்த வி25 ஸீரிசில் மற்றுமொரு வேரியண்டை விவோ (Vivo V25 4G) இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vivo V25 4G இந்தியாவில் அறிமுகமா?

Vivo V25 4G இந்தியாவில் அறிமுகமா?

விவோ 5ஜி ஸ்மார்ட் போன்களைப்போல் அதே வசதிகளுடன் கூடிய புதிய 4ஜி போன்களை விவோ அறிமுகம் செய்யப்போகிறது.

இந்த விவோ வி25 4ஜி (Vivo V25 4G) ஸ்மார்ட்போனின் விவரங்கள் பற்றியும் அறிமுகம் ஆகப்போகும் தேதி பற்றியும் இக்கட்டுரையில் பார்க்கலாம். விவோ வி25 4ஜி அறிமுகம் எப்போது?

இந்த விவோ வி25 ஸீரிலில் இதற்கு முன்னர் வெளியான ஒரு 4ஜி வேரியண்டான வி25இ 4ஜி-யின் அம்சங்களை ஒத்து தான் இந்த புது வி25 4ஜி வேரியண்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த விவோ வி25இ 4ஜி ஸ்மார்ட் போன் தற்போது தாய்லாந்தில் விற்பனையாகி வருகிறது.

மேலும் இந்த விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், விவோ நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி25 4ஜி ஸ்மார்ட்போனில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்பதை இப்போது பார்க்கலாம்.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

4ஜி ரக ஸ்மார்ட்போன் என்பதால் என்ன சிப்செட் உடன் வரும்?

4ஜி ரக ஸ்மார்ட்போன் என்பதால் என்ன சிப்செட் உடன் வரும்?

இந்த விவோ வி25 4ஜி டிவைஸ் ஆனது 4ஜி ரக ஸ்மார்ட்போன் என்பதால் MediaTek Helio G99 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் MediaTek அல்லது Qualcomm புதிதாக எந்த சிப் செட்டும் அறிமுகம் செய்யாததால் Helio G99 SoC தான் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று டெக்னிகல் வட்டம் யூகிக்கிறது.

கேமராவைப் பொருத்தவரை, V25e 4ஜி டிவைஸில் இருக்கும் அதே அம்சங்களே இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் புது போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சம்

வரவிருக்கும் புது போனின் டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சம்

இது 64எம்பி முதன்மைக் கேமராவும், 2எம்பி மாக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் என்று ஸ்மார்ட் போனின் பின்புறம் மூன்று கேமரா செட்டப் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், செல்ஃபிகள் எடுப்பதற்கு ஏதுவாக 32எம்பி முன்பக்க கேமரா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது 6.44' இன்ச் FHD+ மற்றும் 90 Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்பிளே அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் செல்ஃபி கேமராவிற்கென்று வாட்டர் ட்ராப் நாட்ச் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

LPG சிலிண்டரை கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.!LPG சிலிண்டரை கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இந்த முறைப்படி புக்கிங் செய்யுங்க.!

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி

ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி

மேலும் டிஸ்ப்ளேவிலேயே கை ரேகை ஸ்கேன் செய்யும் வசதியும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் போனின் இன்டர்னல் ஸ்டோரேஜ் 124 ஜிபி ஆகும். மேலும் மைக்ரோ SD கார்ட் மூலம் 1டிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட் போன் 44W வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய 4500 mAh பேட்டரியுடன் வருகிறது.

விவோ வி25 4ஜி-எதிர்பார்க்கப்படும் விலை? மேலே கூறப்பட்ட அம்சங்களை வைத்து பார்க்கும்போது.

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த விவோ வி25 4ஜி ஸ்மார்ட் போன் ரூ. 20,000-த்திற்கு விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 5ஜி வசதி இல்லாத ஸ்மார்ட் போன்கள் 20,000 ரூபாய்க்கு இந்தியாவில் பெரும்பாலும் விற்கப்படுவது இல்லை. எனவே இந்திய சந்தையில் இந்த விவோ வி25 4ஜி யின் விற்பனை எப்படி இருக்கும் என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் விவோ நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம், அம்சங்கள், விலை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V25 4G India Launch Tipped Rebadged Vivo V25e 4G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X