அட்டகாசமான அம்சங்களுடன் Vivo V23e 5G அறிமுகம்.. விலை இது தானா?

|

விவோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை (இன்று) தாய்லாந்தில் அதன் புதிய ஸ்மார்ட் போன் மாடலான Vivo V23e 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. மலேசிய சந்தையில் Vivo Y76 5G அறிமுகப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. விவோவின் V-சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன் வரிசையில் MediaTek Dimensity 810 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் கிடைக்கும் தன்மை, விலை மற்றும் முழு விபர தகவலை இப்போது பார்க்கலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் Vivo V23e 5G அறிமுகம்.. விலை இது தானா?

Vivo V23e 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்
இந்த Vivo V23e 5G ஸ்மார்ட் போன் சாதனம் 8ஜிபி ரேம் (4ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் மற்றும்) பேக் அப் செய்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. புதிய Vivo V23e 5G ஸ்மார்ட் போன் சாதனம் 44W Flash Charge ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய Vivo V23e 5G ஸ்மார்ட் போன் Android 11 அடிப்படையிலான FunTouch OS 12 இல் இயங்குகிறது. Vivo V23e 5G இரண்டு வண்ண விருப்பங்களில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo V23e 5G விலை மற்றும் விற்பனை விபரம்
புதிய Vivo V23e 5G ஸ்மார்ட் போன் தாய்லாந்தில் ஒரே வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Vivo V23e 5G ஸ்மார்ட் போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வருகிரியாது. இதன் விலை THB இல் 12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 29,200 ஆகும். இது சன்ஷைன் கோஸ்ட் மற்றும் மூன்லைட் ஷேடோ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று தொடங்கும் மற்றும் விற்பனை டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அட்டகாசமான அம்சங்களுடன் Vivo V23e 5G அறிமுகம்.. விலை இது தானா?

Vivo V23e 5G விவரக்குறிப்புகள்
விவரக்குறிப்புகள் முன், Vivo V23e 5G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 உடன் சேர்த்து இயங்கும் FunTouch OS 12 இல் இயங்குகிறது. இது 6.44' இன்ச் முழு HD+ கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஃபோன் MediaTek Dimensity 810 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி பயனர்கள் 1TB வரை அவர்களின் ஸ்டோரேஜ்ஜை மேலும் விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது.

கேமரா அம்சத்தை பொறுத்தவரை, Vivo V23e 5G ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் f/1.8 துளையுடன் கூடிய 50-மெகாபிக்சல் பிரதான சென்சார், f/2.2 துளையுடன் கூடிய 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் f/2.4 உடன் 2-மெகாபிக்சல் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், Vivo V23e 5G ஆனது f/2.0 துளை கொண்ட 44 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. Vivo V23e 5G ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,050mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

இணைப்பு விருப்பங்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ப்ளூடூத் v5.1, ஜிபிஎஸ், டூயல் நானோ சிம் ஸ்லாட் மற்றும் இரட்டை Wi-Fi ஆதரவு ஆகியவை அடங்கும். இதில் ஆன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் உள்ளது. தொலைபேசியின் எடை 172 கிராம் ஆகவுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V23e 5G With 44W Flash Charge MediaTek Dimensity 810 SoC Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X