Home
News

பிப்.,21 அறிமுகமாகும் விவோ வி23இ 5ஜி- சரியான அம்சம், முறையான விலை: காத்திருந்து வாங்கலாம்!

விவோ ஸ்மார்ட்போனின் தனித்துவ அம்சங்கள் குறித்து பார்க்கையில், அதன் சிறந்த கேமராக்கள் உடன் கூடிய ப்ரீமியம் அமைப்பாகும். விவோ வி23இ 5ஜி சாதனம் இந்தியாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ சாதனத்தின் ஒவ்வொரு புதிய அறிமுகத்துக்கும் அதன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதேபோல் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் படங்களையும் நிறுவனம் வெளியிட்டது. இந்த படங்கள் மூலம் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் வெளிப்புற அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் விவோ வி23 ப்ரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

மைஸ்மார்ட் தளம் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையும் பகிர்ந்துள்ளது. இந்த அறிக்கையின் படி, விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் சன்ஷைன் கோல்ட் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகும். விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது பின்புற பேனல் சூரிய ஒளியில் வெளியிடப்படும் போது பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது அல்ட்ரா மெலிதான கண்ணாடி வடிவமைப்போடு வருகிறது. விவோவின் அதிகாரப்பூர்வ இணையதளமும் இதை உறுதி செய்திருக்கிறது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் செல்பி கேமரா சென்சார்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் செல்பி கேமரா சென்சார்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் செல்பி கேமரா சென்சார் குறித்து பார்க்கையில், இது வாட்டர் டிராப் பின்புற பேனல் மற்றும் மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதி செவ்வக வடிவில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் கேமரா அமைப்புடன் வரும் எனவும் முதன்மை சென்சார், அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ கேமரா ஆகியவையோடு வருகிறது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை விவோ இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. ஆனால் விவோ வி23இ முன்னதாகவே சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது உலகளாவிய மாறுபாட்டிற்கு ஒத்த அம்சங்களோடு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

 44 எம்பி முன்புற கேமரா அமைப்பு

44 எம்பி முன்புற கேமரா அமைப்பு

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று கேமராவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் சென்சார் ஆகியவையோடு வருகிறது. விவோ வி23இ 5ஜி செல்பிகள் மற்றும் வீடியோக்களை பிடிக்க 44 எம்பி முன்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது டிஸ்ப்ளேவில் 1080 x 2400 பிக்சல்கள் ரெசல்யூஷனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. விவோ வி23இ 5ஜி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சன் 810 சிப்செட்

மீடியாடெக் டைமன்சன் 810 சிப்செட்

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சன் 810 சிப்செட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சிப்செட் மூலமாகவே லாவா அக்னி 5ஜி மற்றும் ரியல்மி 8எஸ் 5ஜி போன்ற இடைப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இயக்கப்படுகிறது. விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

4,050 எம்ஏஎச் பேட்டரி

4,050 எம்ஏஎச் பேட்டரி

விவோ வி23இ 5ஜி ஆனது 4,050 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும். விவோ ஸ்மார்ட்போனில் 44 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவையும் எதிர்பார்க்கலாம். விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன் டச் ஓஎஸ் 12 இல் இயங்கும். விவோ வி23இ 5ஜி ஆனது 4 ஜிபி விரிவாக்கக்கூடிய ரேம், டூயல் சிம் கார்டு ஆதரவு, 5ஜி, யூஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் வி 5.1 மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V23E 5G Smartphone Set to Launch on February 21 in India: Expected Specs, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X