Home
News

ஜனவரி 5 உறுதி: 3டி வளைந்த காட்சியுடன் விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி!

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப் பிரிவில் தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி சாதனத்தின் முக்கிய விவரக்குறிப்புகள் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் டுவிட்டரில் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் தொடர் வெளியீடு குறித்து டீஸ் செய்யப்பட்டுள்ளது. விவோ வி23 5ஜி தொடருக்கான மைக்ரோசைட் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பிளிப்கார்ட்டிலும் நேரலையில் இருக்கிறது. விவோ வி23 5ஜி தொடரின் சில முக்கிய விவரக்குறிப்புகள் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் விவோ இந்த தொடரில் எந்த ஸ்மார்ட்போனை வெளியிடும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போன் தொடரில் விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி இரண்டு மாடல்கள் இடம்பெறும் என்பதை மைக்ரோசைட் தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனவரி 5 ஆம் தேதி உறுதி

டுவீட் படி, விவோ வி23 5ஜி தொடர் ஜனவரி 5 ஆம் தேதி மதியம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மற்றொரு டுவீட்டின் படி வரவிருக்கும் விவோ ஸ்மார்ட்போன் வேறு வண்ணத்தில் மாற்று பேனல் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் "இந்தியாவில் முதல் வண்ணத்தை மாற்றும் ஸ்மார்ட்போன் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மாறுபட்ட பூச்சின் மூலம் இது கோல்ட் நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும் தன்மை கொண்டது.

முன்னதாக குறிப்பிட்டுள்ளபடி, விவோ எந்தெந்த ஸ்மார்ட்போன்களை ஜனவரியில் வெளியிடும் என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஆனால் மைக்ரோசைட் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் குறிப்பிடுகிறது.

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்

மைக்ரோசைட் தளம் விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி குறித்த விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்துகிறது. வரவிருக்கும் விவோ வி23 ப்ரோ 5 ஸ்மார்ட்போனானது அல்ட்ரா ஸ்லிம் 3டி வளைந்த காட்சியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது வெண்ணிலா மாடல்களை நினைவூட்டும் மெட்டல் ஃப்ரேம் உடன் வரும் எனவும் இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 5ஜி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

விவோ வி23 5ஜி தொடர் 5ஜி இணைப்பை பெறும் எனவும் இது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் முன்புறத்தில் 50 மெகாபிக்சல் செல்பி கேமரா நைட் மோட் வசதியோடு வரும் என தெரிவிக்கப்படுகிறது. ஏறக்குறைய விவோ வி23 5ஜி ப்ரோ இதே அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வடிவமைப்பு

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வடிவமைப்பு

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2376 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும்.'விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று கேமராக்கள்

மொத்தம் மூன்று கேமராக்கள்

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த சாதனம் 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எஸ் 12 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள்

விவோ எஸ் 12 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோ தனது புதிய விவோ எஸ் 12 தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் விவோ எஸ் 12 மற்றும் விவோ எஸ் 12 ப்ரோ சாதனங்கள் அடங்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள், செயலி திறன்கள் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு சாதனங்களும் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விவோ எஸ் 12, விவோ எஸ் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

விவோ எஸ் 12, விவோ எஸ் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில் மீடியாடெக் சிப்செட்கள், டூயல் முன்புற கேமரா வடிவமைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. விவோ எஸ் 12 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,408 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் 20:9 விகிதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 சிப்செட் வசதியோடு வரும் எனவும் 12 ஜிபி ரேம் வசதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி முதன்மை கேமரா அமைப்புடன் வரும் எனவும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் 2 எம்பி மேக்ரோ சென்சாரை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சாதனத்தின் முன்புறம் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் அது 44 எம்பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமராவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V23 5G, Vivo V23 pro 5G Launch Date Confirms in India: Ultra Slim 3D Curved Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X