அதிரடி விலைக்குறைப்பு: ஒன்று இல்ல மூன்று சாதனங்களுக்கு- விவோ வி21, வி21இ, விவோ ஒய்73 வாங்க சரியான நேரம்!
விவோ வி21, வி21இ, விவோ ஒய்73 சாதனங்களுக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

விவோ வி21, வி21இ, விவோ ஒய்73
இந்தியாவில் விவோ வி21, வி21இ, விவோ ஒய்73 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகள் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை 91மொபைல்ஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய விலை ஆனது மார்ச் 15 (இன்று) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் வி23 சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய இரண்டு மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட்டில் போன்கள் அவற்றின் அசல் விலையிலேயே விற்கப்படுவதன் காரணமாக ஆஃப்லைன் ஸ்டோர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி சிப்செட் வசதி
விவோ வி21 மற்றும் விவோ வி21இ ஸ்மார்ட்போன்கள் முறையே மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ மற்றும் டைமன்சிட்டி 700 சிப்செட்கள் உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் விவோ ஒய்73 ஆனது இடைநிலை சாதனமாகும், இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. விவோ வி21, வி21இ, விவோ ஒய்73 சாதனங்களுக்கு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களின் விலைக்குறைப்புக்கு பிறகான தற்போதைய விலை விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

விலை குறைப்பு குறித்த விவரங்கள்
விவோ ஒய்73 சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.20,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,990 என கிடைக்கிறது. விவோ வி21இ சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.24,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,990 என கிடைக்கிறது. விவோ வி21 சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.29,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,990 என கிடைக்கிறது. விவோ வி21 சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த சாதனமானது ரூ.32,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,990 என கிடைக்கிறது.

விவோ வி21 மற்றும் விவோ வி21இ சிறப்பம்சங்கள்
விவோ வி21 5ஜி ஆனது 6.44-இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை வசதியோடு கிடைக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக மெமரி விரிவாக்கம் செய்யலாம். இது ஃபன் டச் ஓஸ் 11.1 தனிப்பயன் ஸ்கின் மூலம் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயக்கப்படுகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இணைப்பு அம்சங்களை பொறுத்த வரையில் 5ஜி, 4ஜி, டூயல் சிம், டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் போர்ட்ரெய்ட் ஷாட்களுக்கான 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்காக முன்பக்கத்தில் 44 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

64 எம்பி முதன்மை கேமரா
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனானது 6.44-இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 800 நிட்ஸ் பிரகாசம் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவோடு வருகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 ஆதரவோடு இது வருகிறது. விவோ வி21இ ஆனது 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா என இரட்டை கேமரா வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

விவோ ஒய்73 2021 சிறப்பம்சங்கள்
விவோ ஒய்73 2021 ஸ்மார்ட்போனானது எச்டிஆர் 10, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏச் பேட்டரி ஆதரவோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஆதரவு இதில் இருக்கிறது. விவோ ஒய்73 சாதனத்தின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 64 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வசதி இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த சாதனத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications