ரூ.4000 வரை விலைக்குறைப்பு- விவோ வி21 5ஜி, விவோ வி21இ 5ஜி வாங்க சரியான நேரம்: உடனே முந்துங்கள்!
விவோ வி21 5ஜி மற்றும் விவோ வி21இ 5ஜி ஆகிய சாதனங்கள் இடைநிலை விலைப்பிரிவில் இருந்து வீழ்ச்சியை கண்டிருக்கிறது. விவோ வி21 5ஜி சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.27,990 ஆக விற்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனம் ரூ.23,990 ஆக கிடைக்கிறது. அதேபோல் விவோ வி21இ 5ஜி சாதனத்தின் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.30,990 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,990 ஆக கிடைக்கிறது. அதேபோல் விவோ வி21இ 5ஜி சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.35,990 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.35,990 ஆக இருக்கிறது.

விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் உயர் புதிப்பிப்பு வீதம் கொண்டிருக்கவில்லை. பாதுகாப்பு அம்சத்துக்கு என சாதனத்தின் கீழ் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 72 சதவீத பேட்டரியை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என விவோ குறிப்பிட்டுள்ளது.

64 எம்பி பிரதான கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த சாதனத்தின் பின்புறத்தில் 64 எம்பி பிரதான கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 8 எம்பி அல்ட்ரா வைட் இரண்டாம் நிலை கேமரா, டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ சென்சார் ஆதரவோடு உடனான மூன்றாம் நிலை கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வசதியோடு வருகிறது. விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது டூயல் பேண்ட் வைஃபை, 5ஜி, எல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

விவோ வி21 5ஜி சிறப்பம்சங்கள்
விவோ வி21 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 2404×1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசிதயோடு வருகிறது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி
பாதுகாப்பு வசதிக்கு என இந்த சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. மேலும் இதில் பேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் சமீபத்திய ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தோடு ஃபன்டச் ஓஎஸ் 11.1 ஸ்கின் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

மூன்று கேமரா அமைப்பு வசதி
கேமரா சிறப்பம்சங்கள் பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமரா உடனான ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவு, 8 எம்பி வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் செல்பி வசதிக்கு என வாட்டர் டிராப் ஸ்லைட் நாட்ச் வசதியோடு 44 எம்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த முன்புற கேமராவும் ஓஐஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications