மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாகும் விவோ வி19: அட்டகாச அம்சங்கள்., விலை என்ன தெரியுமா?

|

விவோ நிறுவனத்தின் Vivo v19 போனானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த போனின் விலை மற்றும் முக்கிய குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்

விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல்

அண்மையில் விவோ நிறுவனம் தனது விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இதே விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் ஆரம்ப விலை லீக்காகி உள்ளது அதுகுறித்து பார்க்கலாம்.

2340 x 1080பிக்சல் திர்மானம்

2340 x 1080பிக்சல் திர்மானம்

விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

256ஜிபி உள்ளடக்க மெமரி விவோ வி19

256ஜிபி உள்ளடக்க மெமரி விவோ வி19

ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு அல்லது 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4500எம்ஏஎச் பேட்டரி விவோ வி19

4500எம்ஏஎச் பேட்டரி விவோ வி19

ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 18வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 ரூ.25,000-க்கு அறிமுகமா?

ரூ.25,000-க்கு அறிமுகமா?

குறிப்பாக இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் 176கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த வகை போனானது ரூ.25,000-க்கு அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாகும் விவோ வி19

மார்ச் 26 ஆம் தேதி அறிமுகமாகும் விவோ வி19

இந்த போனானது கடந்த மாதம் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்ததையடுத்து தற்போது விவோ வி19 போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

Best Mobiles in India

English summary
Vivo v19 smartphone launch in india at set for march 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X